இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்!
Music composer Deva passed away | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பான் இந்திய அளவில் பிரபலமானவராக வலம் வந்தவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக் குறைவு காரணமாகவும் இன்று காலமான செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 1986-ம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கியவர் இசையமைப்பாளர் தேவா (Music Director Deva). இவரது இசையில் வெளியான பெரும்பாலான பாடல்கள் தற்போதும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் மொழியில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் கொடிக்கட்டிப் பறந்த தேவாவை ரசிகர்கள் தேனிசைத் தென்றல் தேவா என்று அன்புடன் அழைப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியைத் தொடர்ந்து கன்னடா, தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பல நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. இவரது இசையில் தமிழ் சினிமாவில் முன்பு இருந்த உச்ச நடிகர்களில் இருந்து தற்போது உள்ள உச்ச நடிகர்கள் என பலர் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவை அனைத்தும் அவர்களின் கெரியர் பெஸ்ட் படங்களாக ரசிகர்களிடையே தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் தேவா இசையில் கொண்டாடப்படும் சில படங்கள்:
வைகாசிப் பொறந்தாச்சு, ஆத்தா உன் கோயிலிலே, அண்ணாமலை, சூரியன், மூன்றாவது கண், புருஷ லக்ஷனம், செந்தூரப் பாண்டி, ரசிகன், என் ஆசை மச்சான், தாய் மாமன், கருப்பு நிலா, தேவா, தமிழச்சி, ஆசை, தாயகம், காலம் மாறிப் போச்சு, அவ்வை சண்முகி, கல்கி, பாஞ்சாலங்குறிச்சி, எட்டுப்பட்டி ராசா, மாப்பிள்ளை கவுண்டர், அருணாச்சலம், ஒன்ஸ் மோர், அடிமைச் சங்கிலி, நேருக்கு நேர், நட்புக்காக, என் ஆசை ராசாவே, வாலி, பொன்விழா என தமிழ் சினிமாவில் மட்டும் பல நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
தேனிசைத் தென்றல் என கொண்டாடப்படும் தேவா:
தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக வலம் வந்த தேவாவின் இசையில் வெளியான பெரும்பாலான பாடல்கள் ஃபாஸ்ட் நம்பர்களாகவே இருந்தது. இதனால் அவர் ஃபாஸ்ட் நம்பர்கள் மட்டும் தான் இசையமைப்பாளர் என்ற பிம்பத்தை உடைத்து மேலோடி மற்றும் ரொமாண்டிக் பாடல்களையும் இசையமைத்துள்ளார் தேவா. தற்போதும் சில பாடல்களை தேவாதான் இசையமைத்தாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு மெலோடியில் கலக்கி இருப்பார் தேவா. இதன் காரணமாகவே அவரை ரசிகர்கள் தேனிசைத் தென்றல் தேவா என்று கொண்டாடி வருகின்றனர்.




Also Read… சிக்மா படத்திலிருந்து வெளியானது அய்யயோ அம்மாடி பாடல் வீடியோ
இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடகராக ஹிட் கொத்தவர் தேவா:
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் இசையமைப்பாளர்களாக இருக்கும் பெரும்பாலானோர் பாடகராகவும் வலம் வருகின்றனர். அப்படி அவர்கள் பாடும் பாடல்கள் மக்களிடையேயும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அவர்கள் இசையமைக்கும் பாடல்களுக்கு அவர்கள் குரல் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் தேவாவின் குரலை தங்களது இசையில் பயன்படுத்தவேண்டும் என்று பலரும் விருப்பப்பட்டு அவரைப் பாடல்கள் பாட வைப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி அவர் பாடிய பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக் குறைவால் காலமானார் தேவா:
இந்த நிலையில் 75 வயதாகும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலமானார். இந்த செய்தி திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆருதல்களையும் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read… நடிகர் சூரியின் 7-வது படத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் பூஜை போட்டோஸ்!