AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

5 ஆண்டுகளை கடந்தது உடன்பிறப்பு படம்… இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

5 Years Of Udanpirappe Movie | நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் உடன்பிறப்பே. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குநர் ரா.சரவணன் எமோஷ்னல் பதிவை வெளியிட்டுள்ளார்.

5 ஆண்டுகளை கடந்தது உடன்பிறப்பு படம்… இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
உடன்பிறப்பேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 16:20 PM IST

தமிழ் சினிமாவில் கிளாசிக் காலம் தொட்டே தொடர்ந்து அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அப்படி தமிழ் சினிமாவில் வெளியான அண்ணன் – தங்கை படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி இனிவரும் காலங்களிலும் அந்த மாதிரியான கதைகள் வெளியானாலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் உடன்பிறப்பே. இயக்குநர் ரா.சரவணன் எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமார் மற்றும் ஜோதிகா இருவரும் முன்னணி வேடத்தில் நடித்து உள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், சித்தார்த் கே டி, நிவேதிதா சதீஷ், சிஜா ரோஸ், வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், ஆடுகளம் நரேன், நமோ நாராயணா, ஆர்.வேல்ராஜ், கேரவன் அருணாச்சலம் மற்றும் வேங்கைவாசல் மக்கள் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

5 ஆண்டுகளை கடந்தது உடன்பிறப்பு படம்:

இந்தப் படத்தில் அண்ணன் சசிக்குமார் மற்றும் தங்கை ஜோதிகா இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் இருக்கின்றனர். இவர்கள் திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத சூழலில் ஜோதிகாவின் மகன் உயிரிழந்துவிடுகிறார். அதற்கு காரணம் சசிகுமார் தான் என்று ஜோதிகாவின் கணவர் சமுத்திரகனி நினைத்து அவரின் குடும்பத்தையே எதிர்க்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இறுதியில் இந்த இரண்டு குடும்பமும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Nayanthara: அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா? கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்!

இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்ட பதிவு:

Also Read… மலையாள சினிமாவில் இந்த ட்ரைவிங் லைசன்ஸ் படத்தை பார்த்து இருக்கீங்களா? மிஸ் செய்யாதீர்கள்!

Follow Us