யார் இந்த வீட்டில் சிறந்த திருடர்… பிக்பாஸில் இந்த வாரம் டைமண்ட் ஹைஸ்ட் டாஸ்க் – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 5 வாரங்கள் முடிவடைந்து தற்போது 6-வது வாரம் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 5 வாரங்கள் முடிவடைந்து தற்போது 6-வது வாரம் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்த வாரத்தின் லீடராக அன்சர் தேர்வாகி உள்ளார். அவர் தேர்வான உடனே வீட்டில் உள்ள எதிரணி அவரை கோபமடைய என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்க தொடங்கினர். அது மட்டும் இன்றி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதன்முறையாக நேரடி நாமினேஷன் நடைப்பெற்றது. இதன் காரணமாக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே சலசலப்பும் ஏற்பட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த 6-வது வாரமும் முதல் நாள் இப்படி சென்ற நிலையில் அடுத்த நாளே இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த அறிவிப்பை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வழங்கப்படும் டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கும் பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 37-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.




பிக்பாஸில் இந்த வாரம் டைமண்ட் ஹைஸ்ட் டாஸ்க்:
அதன்படி தற்போது வெளியான புரோமோ வீடியோவில் இந்த வாரம் டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த வீட்டில் உள்ள 18 போட்டியாளர்களும் திருடர்களே. அவர்களில் யார் சிறந்த திருடர் என்பதே இந்த போட்டியின் மூலம் தெரிகின்றது என்பதே இந்த டாஸ்கின் நோக்கமாக உள்ளது. இந்தப் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு நிச்சயமாகவே சிறந்த சலுகை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… பிக்பாஸ் தமிழில் இந்த வாரம் நடைபெறும் ஓபன் நாமினேஷன்… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day37 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 13, 2026
Also Read… இன்று மாலை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 27-வது படத்தின் புதிய அறிவிப்பு