AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்று மாலை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 27-வது படத்தின் புதிய அறிவிப்பு

SK 27 Movie Announcement | நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 26-வது படமான சேயோன் படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து இன்று மாலை முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 27-வது படத்தின் புதிய அறிவிப்பு
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Oct 2026 11:41 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 26-வது படமாக உருவாகி வருகின்றது சேயோன். இந்தப் படத்தினை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி வருகிறார்.

மேலும் சிவக்குமார் முருகேஷன் இயக்கத்தில் முன்னதாக வெளியான தாய் கிழவி படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சேயோன் படத்திற்காக கூட்டணி வைத்தனர். இந்த நிலையில் தற்போது தனது 27-வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இன்று மாலை வெளியாகிறது SK 27-வது படத்தின் புதிய அறிவிப்பு:

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா எழுதி இயக்க உள்ளார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான பார்க்கிங் படம் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை வெளியிட உள்ளதாக படக்குழு தற்போது தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… டோரதி படத்திலிருந்து வெளியானது கனகமணி பாடலின் லிரிக்கள் வீடியோ

எஸ்கே 27 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் லட்டர் டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி… எமோஷ்னலான போட்டியாளர்கள்!

Follow Us