பிக்பாஸ் டாஸ்கில் ஸ்டேட்டஜி போட்டது ஒருத்தர் ஜெயித்தது ஒருத்தர்… கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 5-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற விசயங்கள் குறித்து விஜய் சேதுபதி இன்று போட்டியாளர்களிடையே பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் ஒளிபரப்பானதில் இருந்து அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரியில் பொங்கல் பண்டியையின் போது முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த 2026-ம் ஆண்டில் 10-வது சீசனை ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கினர் நிகழ்ச்சி குழு. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பல சர்ப்ரைஸ் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10ல் பல போட்டிகளும் சர்ப்ரைஸ்களும் வைல்கார்ட் போட்டியாளர்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர். இந்த நிலையில் இந்த 5-வது வாரம் போட்டியாளர்களிடையே போட்டியும் அதிகரித்து உள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் இதுவரை இல்லாத அளவிற்கு போட்டியாளர்களிடையே போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. இதனை பார்வையாளர்கள் மட்டும் இன்றி பிக்பாஸ் வெளிப்படையாக பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் டாஸ்கில் ஸ்டேட்டஜி போட்டது ஒருத்தர் ஜெயித்தது ஒருத்தர்:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வார இறுதியில் விஜய் சேதுபதி வந்து பேசும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதன்படி தற்போது வெளியான புரோமோ வீடியோவில் விஜய் சேதுபதி பேசும் போது, இந்த வாரம் டாஸ்கில் ஸ்டேட்டஜி போட்டது ஒருத்தர், போட்டியை வழிநடத்துனது ஒருத்தர் மற்றும் ஆட்டத்தில் ஜெயித்தது ஒருத்தர். அது எப்படி நடந்தது என்பது குறித்து பேசலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… முனியம்மாளின் வாழ்க்கை அனுபவம்.. நகைச்சுவையாக இருக்கும் பிக் பாஸ் புரோமோ!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day34 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 10, 2026
Also Read… இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அந்த தெலுங்கு சினிமா நடிகரை இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்