AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முனியம்மாளின் வாழ்க்கை அனுபவம்.. நகைச்சுவையாக இருக்கும் பிக் பாஸ் புரோமோ!

Bigg Boss Tamil Season 10: தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருபவதுதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 32 நாட்களை கடந்துள்ளது. அந்த விதத்தில், இந்நிகழ்ச்சியில் முனியம்மாள் மற்றும் வினோத் இருவருக்கும் இடையே நடக்கும் நகைச்சுவையான வாக்குவாதங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முனியம்மாளின் வாழ்க்கை அனுபவம்.. நகைச்சுவையாக இருக்கும் பிக் பாஸ் புரோமோ!
பிக் பாஸ் சீசன் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Oct 2026 15:58 PM IST

தென்னிந்திய சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). தமிழில் இந்த நிகழ்ச்சியானது கடந்த 2027ம் ஆண்டு முதல் நடைபெற ஆரம்பித்த நிலையில், இதுவரை மொத்தம் 9 சீசன்களை கடந்துள்ளது. தற்போது பிக் பாஸ் 10 தமிழ் (Bigg Boss Season 10 Tamil) நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தயாரித்துவருகிறார். கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து கிட்டத்தட்ட 6 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது 18 போட்டியாளர்களுடன் நடைபெற்றுவருகிறது.

அந்த விதத்தில் இன்றுடன் (08/10/2026) இந்நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 32 நாட்களாகியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியான 3வது புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இயக்குநர் எச் வினோத்தின் படத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தால்… இரா. சரவணன் ஓபன் டாக்

தனது 15 மற்றும் 20வது வயது வாழ்க்கை அனுபவத்தை குறித்து பகிர்ந்த முனியம்மாள்:

இந்த புரோமோவில், வினோத் பாபு முனியம்மாளிடம் ஹிப்னடைஸ் பண்ணுவதுபோல அவரின் 15 மற்றும் 20 வயது வாழ்க்கை பற்றி கேட்டிருந்தார். அதில் தனது 15வது வயதில், “நான் பள்ளிக்கூடம் படித்தேன், அப்போது ஒரு பையன் என்னை காதலிக்கிறான் என கேட்கிறான், அதற்க்கு அந்த பையன் இவளை காதலிப்பதற்கு பதிலாக செய்துவிடலாம் என சொல்கிறான்” என சிரித்தார்.

இதையும் படிங்க: ரஜினியை போல உள்ளதாலா? டோரதி படத்தில் ரிஷிகாந்த்தை நடிக்க வைக்க காரணம் இதுதான் – கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்!

மேலும் இப்போது உங்கள் வயது 20வது என வினோத் பாபு சொல்ல, முனியம்மாள் அதற்கு அழகான மாப்பிளை, அழகான குடும்பம், மாமியார் நான் துவைத்த தண்ணீரை என்மீது ஊற்றி எப்படி இருக்கிறது என கேட்டார், அதற்கு நானும் முழுவதுமாக வாளியில் இருக்கும் தண்ணீரை மாமியாரின் மீது நான் ஊற்றினேன் என காமெடியாக பேசியிருந்தார். தற்போது இந்த புரோமோ இணையத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 32வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் தலைவராக அக்ஷிதா அசோக் இருக்கும் நிலையில், பல சண்டைகள் மற்றும் சச்சரவுடன் இந்நிகழ்ச்சி இருக்கிறது.மேலும் ஜேசன் மற்றும் அவினாஷ் இருவருக்குமே தொடர்ந்து பிரச்சனைகள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால இந்த நிகழ்ச்சியமானது மேலும் தீவிரமடைந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us