லீடராக இருக்கனாலவே என்னால அத பண்ண முடியாது… பிக்பாஸில் கண்ணீர்விட்ட அக்ஷிதா – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார் அக்ஷிதா. இவர் வீட்டிற்குள் வந்த உடனே பிக்பாஸி வீட்டின் லீடராக தேர்வான நிலையில் அவர் சில விசயங்களை தன்னால் செய்ய முடியாது என்று அழுகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத ஒன்றாக இந்த சீசனில் நடந்துள்ள விசயம் அண்ணன் தங்கை என இரண்டு பேரும் ஒரே போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பிரஜின் மற்றும் சாண்ட்ரா கணவன் மனைவியாக போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிறகு திருமணம் செய்துகொள்வது நடைப்பெற்றுள்ளது. ஆனால் ஜோடியாக கலந்துகொள்வது கடந்த ஆண்டு நடைப்பெற்றது. இப்படி இருக்கும் நிலையில் அண்ணன் தங்கையான நடிகர்கள் அவினாஸ் மற்றும் அக்ஷிதா இருவரும் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளனர். இவர்களில் முதலில் அவினாஷ் உள்ளே சென்ற நிலையில் வைல்கார்ட் போட்டியாளராக அவரது தங்கை அக்ஷிதா தற்போது உள்ளே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி 5-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளே வந்த அக்ஷிதா வந்த உடனே இந்த வாரத்திற்கான லீடர் போட்டியில் கலந்துகொண்டு வீட்டில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்களின் ஆதரவுடன் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து லீடராக பதவி ஏற்ற பிறகு அக்ஷிதாவை சுற்றி பல விசயங்கள் நடைப்பெற்று வருகின்றது.




பிக்பாஸில் கண்ணீர்விட்ட அக்ஷிதா – வைரலாகும் வீடியோ:
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 32-வது நாளிற்கான இரண்டவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வினோத் பாபு பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் தவறான விசயங்களுக்கு போட்டியாளரை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனைக் கேட்ட அக்ஷிதா நான் லீடர் தான். ஆனால் அதற்காகவே என்னால் இது அனைத்தையும் செய்ய முடியாது என்று அழுதுகொண்டே பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… காதல் அம்பு உட்டு என்ன செஞ்சிட்டாளே… 10 ஆண்டுகளை நிறைவு செய்தது சிவகார்த்திகேயனின் ரெமோ படம்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட பதிவு:
#Day32 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/IMmMfSj1cM
— Vijay Television (@vijaytelevision) October 8, 2026
Also Read… பிக்பாஸ் டாஸ்கில் கெட்ட வார்த்தை பேசிய தன்யா… சொல்லி அடித்த அஸ்மிதா – வெளியானது மாஸ் புரோமோ!