AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Scene: ஆத்தி இவ யார்ரா.. சூர்யாவின் சீன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Suriyas Scene Movie : மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் சீன். இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, மிக பிரம்மாண்டமகாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது வரும் 2026ம் தீபாவளியில் வெளியாகும் நிலையில், தற்போது முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Scene: ஆத்தி இவ யார்ரா.. சூர்யாவின் சீன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சீன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Oct 2026 19:05 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக மக்கள் மத்தியில் அறியப்படுபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடந்து புதிய படங்களில் நடித்துவருகிறார். இறுதியாக சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons). இந்த படத்திற்கு பின் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan)  இயக்கியுள்ள புதிய படம்தான் சீன் (Scene). தி ஒன் சூர்யா லீட் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் இணைந்து நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மெயின் வில்லனாக நடிகர் நஸ்லென் நடித்துள்ளாராம். இந்த படமானது நகைச்சுவை, திரில்லர் மற்றும் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுஷீன் ஷ்யாம் (Sushin Shyam) இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் “ஆத்தி இவ யார்ரா” (Aathi Iva Yarraa) என்ற பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் படத்தில் நஸ்லேனின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்

சூர்யாவின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆத்தி இவ யார்ரா பாடல் ரிலீஸ் எப்போது:

இந்த படமானது கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுஷீன் ஷ்யாம் இசையமைத்துள்ள நிலையில், முதல் சிங்கிள் “ஆத்தி இவ யார்ரா” வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.தற்போது வெளியான இந்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் வெற்றி… ஆர்.ஜே.பாலாஜிக்கு குவியும் வாய்ப்புகள்!

சூர்யாவின் சீன் படத்தின் முதல் பாடல் குறித்து எக்ஸ் பதிவை வெளியிட்ட பதிவு:

இந்த சீன் படமானது வரும் 2026ம் நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகி காத்திருக்கிறது. அந்த விதத்தில் இப்படத்தில் சூர்யா கண்கள் தெரியாத நபராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு உதவும் நபராக நடிகை நஸ்ரியா நடித்துள்ளதாகவும், நடிகர் நஸ்லென் இப்படத்தில் சைக்கோ கில்லராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

Follow Us