கருப்பு படத்தின் வெற்றி… ஆர்.ஜே.பாலாஜிக்கு குவியும் வாய்ப்புகள்!
Director RJ Balaji | தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான கருப்பு படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பாலிவுட் வரை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரேடியோவில் ஆர்.ஜே-வாக தனது பணியைத் தொடங்கியவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் காமெடி டைமிங் சென்சை பார்த்து இம்ப்ரஸ் ஆன இயக்குநர் சுந்தர் சி தனது படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜிக்கு வாய்ப்பை அளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பிறகு சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு ஆர்.ஜே.பாலாஜி தனது படங்களை அவரே இயக்கத் தொடங்கினார். அப்படி ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் இறுதியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கருப்பு.
நடிகர் சூர்யாவின் 45-வது படமாக திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தப் படம் என்ன என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.




கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜிக்கு குவியும் வாய்ப்புகள்:
கருப்பு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, ஒரு இயக்குநராக ஆர்.ஜே. பாலாஜிக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் அவருக்கு 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியம் வழங்கவும் தயாராக உள்ளனர். அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது (அதை அவர் இன்னும் ஏற்கவில்லை). அதேவேளையில், சூர்யாவின் பிரம்மாண்டமான சூர்யா 50 திட்டத்தின் ஒரு பகுதியாக கருப்பு 2 படத்தை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது. இருப்பினும், அவர் இது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மாறாக, ஏற்கனவே ஒப்புக்கொண்ட நடிப்பு சார்ந்த படங்களில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… Mysskin: பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் வருமா என தெரியவில்லை.. மிஷ்கின் பேச்சு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#RJBalaji, after the #Karuppu BLOCKBUSTER SUCCESS, is in GREAT DEMAND as a director, with producers willing to pay him a salary of over ₹30Cr+. He has a Bollywood film offer, which he hasn’t accepted yet, and also another offer to do #Karuppu2 as part of #Suriya’s prestigious magnum opus project #Suriya50.
However, he hasn’t taken any call yet and is purely concentrating on his acting films that he had committed to prior!!
— Movies Singapore (@MoviesSingapore) October 6, 2026
Also Read… முனியம்மாள் கிளப்பிவிட்ட பிரச்சனை… பிக்பாஸில் பூகம்பமாக வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ!