AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மொதராத்திரி படத்தை பாராட்டி பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி – வைரலாகும் பதிவு

RJ Balaji talks about Modha Rathri movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் சமீபத்தில் மொத ராத்திரி படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மொதராத்திரி படத்தை பாராட்டி பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி – வைரலாகும் பதிவு
மொதராத்திரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2026 17:41 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியான படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. குறிப்பாக தமிழ் சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை வெளியான லாக்டவுன், வித் லவ், பூக்கி, தாய் கிழவி, யூத், ஹேப்பி ராஜ், ப்ளாஸ்ட், டபுள் ஆக்குபென்சி, அங்கீகாரம், கான் சிட்டி, இதயம் முரளி, லவ் ஓ லவ் முதல் தற்போது வெளியாகி உள்ள மொத ராத்திரி வரை தொடர்ந்து பல அறிமுக இயக்குநர்களின் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதன்படி சமீபத்தில் அறிமுக இயக்குநர் ராஜா கருப்புசாமி எழுதி இயக்கிய மொத ராத்திரி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் ரிஷிகாந்த் நாயகனாகவும் நடிகை அனிஷ்மா அனில்குமார் நாயகியாகவும் நடித்து உள்ளார். இந்தப் படம் காமெடியை மையமாக வைத்து பல சமூக கருத்துகளை பேசி உள்ளது. இதனை ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மொதராத்திரி படத்தை பாராட்டி பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி:

அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, மொத ராத்திரி ஒரு மிகச்சிறந்த திரைப்படம். இது அர்த்தமுள்ள அதே சமயம் உணர்வுப்பூர்வமான, வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் ஒரு படைப்பு. இதன் திரைக்கதை அபாரமாக அமைந்துள்ளது. இந்தத் தகுதியான வெற்றிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ், ராஜா கருப்புசாமி, ரிஷிகாந்த், திறமையான அனிஷ்மா மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த ஹீரோக்களுடன் படம் பண்ண முயற்சி பண்ணேன் – பி.எஸ்.மித்ரன் ஓபன் டாக்!

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Abishan Jeevinth: அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா? – அறிவிப்பு இதோ!

Follow Us