AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணியின் மகள் – விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

SIT Questions Veeramani Daughter : போக்சோ வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணி, சிங்கப்பூர் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணியின் மகள் – விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
ஜெம் வீரமணி வழக்கு
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Oct 2026 20:09 PM IST

சென்னை, அக்டோபர் 23 : போக்சோ வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணி, சிங்கப்பூர் (Singapore) செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ள நிலையில், விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணியின் மகள்

சிங்கப்பூர் செல்வதற்காக ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா அக்டோபர் 23, 2026 இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அனைத்துச் சோதனைகளையும் முடித்துவிட்டு, அவர் விமானத்தில் ஏற முயன்றார். அப்போது, கடைசி நேரத்தில் குடியுரிமை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், வீரமணி மீதான வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தால், சிங்கப்பூர் செல்லவிருந்த இண்டிகோ விமானம் 12 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

இதையும் படிக்க : பழனி பஞ்சாமிர்தத்துக்கு வாழைப்பழம் வழங்க டெண்டர்: ரூ.1 கோடி வைப்புத் தொகை – வெளியான அறிவிப்பு

விமான நிலையத்திலிருந்து அர்ச்சனாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

இதனிடையே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணி உள்பட 3 பேரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் எஸ்ஐடி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெம் வீரமணி உள்பட 3 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது

வழக்கின் பின்னணி

சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட 84 வயதான தொழிலதிபர் ஜெம் வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாகச் சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹனும் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருந்தும் காவல் துறைக்குத் தெரிவிக்காததாக, வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார். சிறுமிகளை அழைத்து வந்ததாக ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகியோரும் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: நெல்லை, கன்னியாகுமரிக்கு இன்று ரெட் அலர்ட்: இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை

சமீபத்தில் ஜெம் வீரமணியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், 14 மணி நேரம் நடந்த விசாரணையில் அவரிடம் 200 கேள்விகளை எழுப்பினர். இந்த வழக்கின் போக்கை அறியப் பொதுமக்களிடையே ஆர்வம் நிலவுவதால், விசாரணையின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் அதிகாரப்பூர்வமாகச் செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் எனச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வழக்கின் ஒவ்வொரு நகர்வு குறித்தும் சிறப்புப் புலனாய்வுக் குழு வாரந்தோறும் செய்திக்குறிப்பு வெளியிட்டு வருகிறது.

Follow Us