AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 திட்டங்கள் – தமிழக அரசின் சூப்பர் திட்டம்

Chennai Traffic Congestion Relief : சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 3 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக நெடுஞ்சாலைத் துறையின் சென்னை நகர சாலைகள் கோட்டம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 திட்டங்கள் – தமிழக அரசின் சூப்பர் திட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Oct 2026 18:10 PM IST

சென்னை, அக்டோபர் 23 : சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 3 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக நெடுஞ்சாலைத் துறையின் சென்னை நகர சாலைகள் கோட்டம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. குறிப்பாக அதில், கோயம்பேடு அருகே கூவம் ஆற்றுப் பாலம் (Koyambedu Flyover), வடசென்னையில் பேசின் பாலம் ஆகியவற்றை அகலப்படுத்துவதும், வியாசர்பாடியில் உள்ள மேம்பாலக் கட்டமைப்பை நீட்டிப்பதும் இந்தத் திட்டங்களில் அடங்கும்.

கோயம்பேடு – திருமங்கலம் இடையிலான பாலம் விரிவாக்கம்

சென்னையின் முக்கியப் போக்குவரத்துப் பாதையான உள்வட்டச் சாலையில் கோயம்பேடு – அண்ணா நகர் மேற்கு சந்திப்பு அருகே கூவம் ஆற்றின் குறுக்கே இந்தப் பாலம் அமைந்துள்ளது. வி.ஆர். மால் பகுதியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பாலத்தில், நாளொன்றுக்கு 1.20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் கார் போக்குவரத்து உள்ளது. இதனால், கோயம்பேடு சந்திப்பு முதல் வி.ஆர். மால், திருமங்கலம் சந்திப்பு வரை கடும் நெரிசல் ஏற்படுகிறது.

இதையும் படிக்க : கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்!!

தற்போது 18.8 மீட்டர் அகலத்தில் உள்ள இந்தப் பாலத்தை, இருபுறமும் தலா 7.5 மீட்டர் விரிவுபடுத்தி 33.8 மீட்டராக அகலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 131 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் 8 பகுதிகளிலும் இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். பாலத்தின் இருபுற அணுகுசாலைகளையும் தலா 250 மீட்டர் நீளத்துக்கு 5 மீட்டர் அகலப்படுத்துவது குறித்தும் அறிக்கையில் ஆய்வு செய்யப்படும்.

பேசின் பாலம்

ஜி.என்.டி சாலையின் 3/2 கி.மீ அளவுக்கு நீளமாக அமைந்துள்ள பேசின் பாலம், பக்கிங்ஹாம் கால்வாய், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம், ஓட்டேரி நல்லா ஆகியவற்றைக் கடந்து செல்கிறது. இந்தப் பாலத்தின் சாலைப் பகுதி வெறும் 6 மீட்டர் அகலத்திலேயே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக நெடுஞ்சாலைத் துறை ஆவணம் குறிப்பிடுகிறது. இந்தச் சாலையில் நாளொன்றுக்கு 1,12,586 போக்குவரத்து பதிவாகிறது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்வி நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், சரக்கு ரயில் முனையங்கள், வணிக நிறுவனங்கள், சிறு தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்குச் செல்வதற்கான முக்கிய வழித்தடமாக இந்தப் பாதை உள்ளது. சென்னை துறைமுகத்துக்கான சரக்குப் போக்குவரத்திலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் திட்ட அறிக்கைக்காக, நில அளவீடு, போக்குவரத்துக் கணக்கெடுப்பு, மண் பரிசோதனை, நீரியல் ஆய்வு, நிலத்தடி மற்றும் மேல்நிலை மின் கம்பிகள் உள்ளிட்ட பயன்பாட்டுக் கட்டமைப்புகளை வரைபடமாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதையும் படிக்க : பத்மநாபசாமி முதல் ராமேஸ்வரம் வரை! குறைந்த செலவில் சுற்றுலா செல்லலாம் வாங்க!

வியாசர்பாடி மேம்பாலம்

வியாசர்பாடியில் ஜி.என்.டி. சாலையின் 4 கி.மீ. முதல் 5 கி.மீ. வரையிலான பகுதியில் அமைந்துள்ள மேம்பாலக் கட்டமைப்புநீட்டிப்பதற்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு திட்டத்துக்குமான அறிக்கையில், தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள், பொறியியல் வடிவமைப்பு, நிலத் தேவை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கங்கள், திட்டச் செலவு உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே, திட்டங்களின் இறுதிச் செலவும் செயல்படுத்தும் முறையும் தீர்மானிக்கப்படும்.

Follow Us