AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொடர்ந்து 2வது ஆண்டாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை முதலிடம்: டிஜிபி பாராட்டு

Tamil Nadu Disaster Response Force : தென் மாநிலங்கள் உள்ளிட்ட 6 மாநிலங்கள் பங்கேற்ற மண்டல அளவிலான சிபிஆர்என் (CPRN) போட்டியில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணி முதலிடம் பிடித்துள்ளது. வெற்றி பெற்ற வீரர்களை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆர்.தினகரன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

தொடர்ந்து 2வது ஆண்டாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை முதலிடம்: டிஜிபி பாராட்டு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Oct 2026 18:59 PM IST

சென்னை, அக்டோபர் 23: தென் மாநிலங்கள் உள்ளிட்ட 6 மாநிலங்கள் பங்கேற்ற மண்டல அளவிலான சிபிஆர்என் (CPRN) போட்டியில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணி முதலிடம் பிடித்துள்ளது. வெற்றி பெற்ற வீரர்களை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆர்.தினகரன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். வேதியியல் உயிரியல். கதிரியக்கம் , அணு ஆகிய அபாயங்களைச் சுருக்கமாகக் குறிப்பதே ‘சிபிஆர்என்’ ஆகும். இதில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களிலும் தமிழக அணி முதலிடம் பிடித்திருக்கிறது.

சிபிஆர்என் போட்டியில் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம்

2026 ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான சிபிஆர்என் போட்டி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10வது பட்டாலியன் வளாகத்தில், கடந்த அக்டோபர் 12, 2026 அன்று தொடங்கி அக்டோபர் 15, 2026 தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அணிகள் இதில் களம் இறங்கின.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: நெல்லை, கன்னியாகுமரிக்கு இன்று ரெட் அலர்ட்: இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை

20 பேர் கொண்ட தமிழக அணி

தமிழகத்தின் சார்பில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 13வது பட்டாலியனைச் சேர்ந்த பேரிடர் மீட்புப் படை அணி பங்கேற்றது. துணைத் தளவாய் எஸ்.மணிமாறன் தலைமையிலான இந்த அணியில், 2 உதவி ஆய்வாளர்கள், 17 காவலர்கள் உள்பட மொத்தம் 20 பேர் இடம்பெற்றிருந்தனர். போட்டியில் திறம்படச் செயல்பட்ட தமிழக அணி, முதலிடத்தைக் கைப்பற்றியது.

பதக்கம் வழங்கிப் பாராட்டு

வெற்றியுடன் திரும்பிய வீரர்களை, தமிழகக் காவல் துறையின் ஆயுதப்படைப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.தினகரன் நேரில் அழைத்துப் பாராட்டினார். அணியினருக்குச் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி அவர் வாழ்த்துத் தெரிவித்தார். ஆவடியில் உள்ள படைப் பயிற்சி மையத்தின் தளவாய் எஸ்.விஜயகுமாரும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, தேசிய அளவிலான சிபிஆர்என் போட்டியில் தமிழக அணி பங்கேற்கவுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8வது பட்டாலியனில், நவம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க : கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்!!

தொடரந்து 2வது ஆண்டாக வெற்றி

இந்த அணிக்கு இது முதல் வெற்றி அல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற மண்டல அளவிலான போட்டி, தேசிய அளவிலான போட்டி ஆகிய இரண்டிலும், 13-வது பட்டாலியனின் பேரிடர் மீட்புப் படை அணியே முதலிடம் பிடித்தது. மண்டல அளவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ள தமிழக அணி, தேசிய அளவிலும் தனது வெற்றியைத் தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Follow Us