பத்மநாபசாமி முதல் ராமேஸ்வரம் வரை! குறைந்த செலவில் சுற்றுலா செல்லலாம் வாங்க!
Viyahana Payanam: ஐஆர்சிடிசி (IRCTC) அமைப்பு ஹைதராபாத்தில் இருந்து பத்மநாபசாமி கோயில், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களைச் சுற்றிப் பார்க்கும் 'தென்னிந்திய டெம்பிள் ரன்' என்ற புதிய விமானச் சுற்றுப்பயண பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. எளிய நடுத்தரக் குடும்பங்களும் எளிதில் பயன்டைடயும் வகையில் நியாயமான கட்டணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆன்மீகப் பயணத்திற்கு ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களது இருக்கைகளை முன்செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காகவும், அவர்களின் பயணச் சுமையைக் குறைப்பதற்காகவும் இந்திய ரயில்வே சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC) தொடர்ச்சியாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தென்னிந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களை விமானம் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் சுற்றிப் பார்க்கும் வகையில் ‘தென்னிந்திய டெம்பிள் ரன்’ (South India Temple Run) என்ற புதிய விமானச் சுற்றுப்பயணப் பேக்கேஜை தற்போது ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது.
1. ட்ராவல் விவரங்கள்
ஹைதராபாத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பயணமானது, தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற பல ஆன்மீகத் தலங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயில் தரிசனம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமம், பகவதி அம்மன் கோயில் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் ஆகியவற்றைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு பயணிகளுக்குக் கிடைக்கிறது. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட புனிதத் தலங்களிலும், புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் எளிதில் வழிபாடு செய்யலாம்.
Also Read: நவராத்திரி ஸ்பெஷல்… அம்மன் அருள் கிடைக்க இந்த பொருட்களை வாங்கினாலே போதும்!
2. பயண விவரம் மற்றும் வசதிகள்
நீண்ட தூர ரயில் பயணச் சோர்விலிருந்து பயணிகள் முழுமையாகத் தப்பிக்கும் வகையில், ஹைதராபாத்தில் இருந்து செல்வதற்கும் திரும்புவதற்கும் விமானப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி தரநிலைகளின்படி, பயணிகளுக்கு உயர்தர ஏசி விடுதிகளில் தங்குமிடமும், தரமான சைவ உணவும் இந்த பேக்கேஜிலேயே முழுமையாக வழங்கப்படுகிறது. மேலும், கோயில்கள் மற்றும் இதர சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வர வசதியாகச் சொகுசு ஏசி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கான வழிகாட்டிகளும் (Tour Guides) உடனிருந்து பாதுகாப்பாக வழிநடத்துவார்கள்.
3. கட்டணம் மற்றும் முன்பதிவு விவரங்கள்
பயணிகளின் மொத்த எண்ணிக்கை, தங்கும் அறைகளின் அமைப்பு மற்றும் விமானக் கட்டண நிலவரத்திற்கு ஏற்ப இந்தப் பயணத்திற்கான கட்டணம் மாறுபடலாம். எளிய நடுத்தரக் குடும்பத்தினரும் கலந்துகொள்ளும் வகையில் இதன் கட்டகங்கள் மிக நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள பயணிகள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ சுற்றுலா இணையதளம் மூலமாகத் தங்களது இருக்கைகளை முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஐஆர்சிடிசி சுற்றுலா அலுவலகங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.