AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்!!

Multi-Level Car Parking in Kodaikanal: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பலடுக்கு கார் பார்க்கிங் மற்றும் வணிக வளாகம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க தமிழக அரசு அதிரடி திட்டம்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Oct 2026 14:21 PM IST

திண்டுக்கல், அக்.23: மலைகளின் இளவரசியாகத் திகழும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், வாகனங்களின் வரத்தும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் கொடைக்கானல் நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயருவதால், நகரின் முக்கிய வீதிகளிலும் மலைப்பாதைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் வாகன நெரிசலில் சிக்கித் தவிப்பதோடு, வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கான (Parking) உரிய இடப்பற்றாக்குறை நிலவுவதும் இப்பகுதியில் நீண்டகாலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதையும் படிக்க: Chennai Crime: இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது! தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

கார் பார்க்கிங், வணிக வளாகம் அமைக்க திட்டம்:

சுற்றுலாப் பயணிகளின் இந்த நீண்டகாலச் சிரமங்களை முழுமையாகக் களைவதற்கும், கொடைக்கானல் நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் தமிழக அரசு தற்போது ஒரு விரிவான மற்றும் சிறப்பான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மதுரைக்குச் சொந்தமான சுமாா் 7.59 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP – Public Private Partnership) முறையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டமாக இதனைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பலடுக்கு கார் பார்க்கிங் (Multi-level car parking) அமைப்பதற்கும், மீதமுள்ள நிலத்தில் வணிக வளாகம் மற்றும் அதற்கான வாகன நிறுத்துமிட வசதிகளை உருவாக்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகளை மேற்கொள்ள டெண்டர் அறிவிப்பு:

இந்தப் பெருந்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, உரிய சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரித்து பரிவர்த்தனை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காகத் தகுதியான ஆலோசகர்களைத் தேர்வு செய்ய அரசு தரப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் அந்த ஆலோசகர்கள், திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் தற்போதைய நிலை, கட்டண விவரங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகள் குறித்து முழுமையான தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், திட்டமிடப்பட்டுள்ள இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் பெருகக்கூடிய வாகனங்களின் தேவைகளைக் கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கு.. சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி உள்பட மேலும் இருவர் கைது.. போலீசார் அதிரடி!!

அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை:

இந்த ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் சாத்தியக்கூறு மதிப்பீடுகளின் அடிப்படையில், திட்டத்திற்கான அடுத்த கட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் அவர்களின் பயணச் சுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையேயும் சுற்றுலாத் துறையினர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கொடைக்கானலில் வாகன நெரிசல் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படுவதோடு, சுற்றுலாத் துறை சார்ந்த வணிக நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us