Tamil Nadu Weather Alert: நெல்லை, கன்னியாகுமரிக்கு இன்று ரெட் அலர்ட்: இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அக்டோபர் 23, 2026 இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, அக்டோபர் 23 : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அக்டோபர் 23, 2026 இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் (Red Akert) எச்சரிக்கையும், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 24, 2026 நாளை திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றஉம் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : கோவையில் மாணவன் தற்கொலை விவகாரம்.. பள்ளி தலைமை ஆசியர் உள்பட இருவர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை!




மேலும் அக்டோபர் 25, 2026 ஞாயிற்றுக்கிழமை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 26, 2026 திங்கள் கிழமை நீலகிரி, கோவை, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “பள்ளிகளை சாதி வெறிக்கான களமாக மாற்றுவதா?”.. கோவை மாணவன் விவகாரத்தில் அரசை சரமாரியாக சாடிய உதயநிதி!!
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அக்டோபர் 23, 2026 இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அக். 23 முதல் 26 வரை தொடர்ந்து நான்கு நாள்களும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.