AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தூத்துக்குடியில் பரபர சம்பவம்.. வீடு புகுந்து அரிவாள் தாக்குதல்.. கணவன்- மனைவி கொடூர கொலை.. கைதான நபர் பகீர் வாக்குமூலம்!

Thoothukudi Murder : தூத்துக்குடி மாவட்டத்தில் மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூர தாக்குதல் நடத்திய நிலையில் பெண் கொலை செய்யப்பட்டார். அவரது கணவன், மகன் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

தூத்துக்குடியில் பரபர சம்பவம்.. வீடு புகுந்து அரிவாள் தாக்குதல்.. கணவன்- மனைவி கொடூர கொலை.. கைதான நபர் பகீர் வாக்குமூலம்!
கொலை செய்யப்பட்ட பெண்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 Oct 2026 12:46 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் வசித்து வருபவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. தம்பதிக்கு பிளஸெட் ராஜா என்ற மகனும், 15 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், முத்துகிருஷ்ணன் வீட்டுக்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரை அரிவாளால் வெட்டியது. இதில், மேரி விஜிலா அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளஸெட் ராஜா ஆகியோருக்கு பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத் தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று அரிவாள் வீட்டில் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரிவாள் வெட்டில் பெண் பலி- கணவன்- மகனுக்கு சிகிச்சை

அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மேரி விஜிலா பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. பலத்த வெட்டு காயம் அடைந்த முத்துகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் பிளஸெட் ராஜா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: http://முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் கைது.. நாதக கார்த்திகா உள்பட 9 பேருக்கு கிடைத்தது ஜாமீன்.. அதிரடி விடுதலை!

காணாமல் போன இரு சிறுமிகள் மீட்பு

இதனிடையே, மர்ம கும்பல் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து அரிவாள் தாக்குதல் நடத்திய நிலையில், முத்துகிருஷ்ணனின் இரு மகள்கள் திடீரென காணாமல் போயினர். அவர்கள் குறித்து சாத்தான்குளம் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இருட்டு அறையில் இரு சிறுமிகளும் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில், இரு சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

பரோட்டா மாஸ்டரை கைது செய்த போலீசார்

மேலும், சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இதில், கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர தேர்தல் வேட்டை மேற்கொண்டு வந்த நிலையில் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள பனைகுளம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாசை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது மகளுடன் பழகுவதை மேகி விஜிலா கண்டித்ததால் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு.. சென்னையில் திமுக பிரமுகர் அதிரடி கைது.. பரபரப்பில் கட்சியினர்!

Follow Us