முதல்வர் விஜய் குறித்து அவதூறு.. சென்னையில் திமுக பிரமுகர் அதிரடி கைது.. பரபரப்பில் கட்சியினர்!
Thiruvanmiyur DMK Functionary Arrest : முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் திருவான்மியூர் திமுக பிரமுகரை இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கை து செய்து சிறையில் அடைத்தனர் .
சென்னை மாவட்டம், மயிலாப்பூர் நொச்சிகுப்பம் எல்லையம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் பிரசண்யா. இவர், தமிழக வெற்றி கழகத்தின் மயிலாப்பூர் கிழக்கு மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பிரசண்யா சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல இணையவழி குற்ற தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்து இருந்தார். அந்த புகாரில், திருவான்மியூர் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதி ஆவார். இவர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்.
முதல்வர் விஜய் குறித்து சோஷியல் மீடியாவில் அவதூறு
திமுக பிரதிநிதி ராஜகோபால் தனது எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முதல்வர் விஜய் குறித்து அவதூறான தகவல்களை பதிவேற்றம் செய்து அதனை பரவ விட்டுள்ளார். இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது, முதல்வர் விஜயின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட திமுக பிரதிநிதி ராஜகோபால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தவெக மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பிரசண்யா தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் கைது.. நாதக கார்த்திகா உள்பட 9 பேருக்கு கிடைத்தது ஜாமீன்.. அதிரடி விடுதலை!




திருவான்மியூர் திமுக பிரமுகர் அதிரடி கைது
அந்த புகாரின் அடிப்படையில், இணைய வழி குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகோபாலிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவரது சமூக வலைதள கணக்குகளை போலீசார் கைப்பற்றி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், முதல்வர் விஜய் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகளை ராஜகோபால் வெளியிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, திமுக பிரதிநிதி ராஜகோபால் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திமுகவில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை
அவர் பதிவிட்ட அவதூறு பதிவுகளை போலீசார் நீக்கி சமூகவலைதள கணக்கை முடக்கினர். இந்த சம்பவம் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது, விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: புதிய தலைமை செயலகம் குறித்த RTI கேள்விக்கு பகீர் பதில்.. யூ டர்ன் போடும் தவெக அரசு.. நயினார் நாகேந்திரன் விளாசல்!