AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் கைது.. நாதக கார்த்திகா உள்பட 9 பேருக்கு கிடைத்தது ஜாமீன்.. அதிரடி விடுதலை!

NTK Functionary Bail Granted : முதல்வர் விஜய் ரோடு ஷோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் நி்ரவாக கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது .

முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் கைது.. நாதக கார்த்திகா உள்பட 9 பேருக்கு கிடைத்தது ஜாமீன்.. அதிரடி விடுதலை!
நாம் தமிழர் கட்சி நிர்வாக கார்த்திகா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 21:54 PM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் கடந்த அக்டோபர் 6- ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கார்த்திகா போட்டியிட்டு இருந்தார். இந்த நிலையில், இதே தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சத்தியபாமா வேட்பாளராக களம் இறங்கிய நிலையில், அவருக்கு ஆதரவு கோரி அந்த கட்சியின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டிருந்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கார்த்திகா கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

தவெக தொண்டர் மீது தாக்குதல்

அத்துடன், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற பாதையில் அனுமதி அளிக்கப்படாத இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் பதாகையை போலீசார் அகற்றிய போது, அவர்களை அவதூறாக பேசி தாக்கம் முயன்றதாகவும், காமராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் குழந்தையுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர் மீது தாக்குதல் நடத்தியது.

மேலும் படிக்க: புதிய தலைமை செயலகம் குறித்த RTI கேள்விக்கு பகீர் பதில்.. யூ டர்ன் போடும் தவெக அரசு.. நயினார் நாகேந்திரன் விளாசல்!

கார்த்திகா உள்பட 9 பேர் சிறையில் அடைப்பு

அவதூறு வீடியோ பதிவிட்டது என்பன உள்ளிட்ட 4 வழக்குகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேர் மீது 12- க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருந்தனர். அவர்களுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது.

ஜாமீன் வழங்கிய குற்றவியல் நடுவர் நீதிமன்றம்

இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி 9 பேரும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாதக வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்ததற்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அரசியல் கட்சியாக மாறும் வீ த லீடர்ஸ்.. தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் வரும்.. மகளிர் மாநாட்டில் அண்ணாமலை அதிரடி!

Follow Us