AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதிய தலைமை செயலகம் குறித்த RTI கேள்விக்கு பகீர் பதில்.. யூ டர்ன் போடும் தவெக அரசு.. நயினார் நாகேந்திரன் விளாசல்!

Nainar Nagendran Latest Pressmeet : பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு தவெக அரசு அளித்த பதிலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமை செயலகம் குறித்த RTI கேள்விக்கு பகீர் பதில்.. யூ டர்ன் போடும் தவெக அரசு.. நயினார் நாகேந்திரன் விளாசல்!
முதல்வர் விஜய்- நயினார் நாகேந்திரன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 20:56 PM IST

தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக தவெக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கலாம் என்று எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழக அரசு பதில் அளித்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பட்டினப்பாக்கத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 1500- க்கும் அதிகமான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்ட பரிந்துரைத்தது யார்

இந்த இடத்தில் முறையான ஆய்வுகளை அரசு மேற்கொள்ளாமல் தலைமைச் செயலகம் கட்ட யார் பரிந்துரை செய்தது. முதல் அமைச்சரின் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் ஒரே காரணத்துக்காக கண்ணை மூடிக்கொண்டு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்து விட்டார்களா அல்லது அங்கு வாழும் மீனவ குடும்பங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டார்களா. அது எப்படி அரசால் கட்டப்படும் புதிய தலைமைச் செயலகம் குறித்த எந்த விதமான தகவலும் சம்பந்தப்பட்ட அரசிடமே இல்லாமல் போகும். எதை மூடி மறைக்க பார்க்கிறார்கள்.

மேலும் படிக்க: நீண்ட கால சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்.. சட்டத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சண்முகம்.. பின்னணி என்ன!

யூ டர்ன் போடும் தவெக அரசு

இவ்வாறு அனைத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு செய்வதால் தான் அடிக்கடி யூ டர்ன் போட்டுக் கொண்டிருக்கிறது தமிழக வெற்றி கழக அரசு என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழக வீட்டு வசதி வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் துறைக்கு சொந்தமான 25.55 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

ஆர்டிஐ கேள்விக்கு பொதுப்பணித்துறை பதில்

இந்த பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடன் அணுக்கள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தலைமைச் செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பொதுப்பணித்துறை தங்களிடம் உரிய பதிவுகள் இல்லை என்று பதில் அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: அரசியல் கட்சியாக மாறும் வீ த லீடர்ஸ்.. தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் வரும்.. மகளிர் மாநாட்டில் அண்ணாமலை அதிரடி!

Follow Us