AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்.. முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர் கொலை.. தந்தை-மகன்கள் வெறிச்செயல்!

Kulasekarapattinam Murder : தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த பக்தரை அடித் து கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக தந்தை மற்றும் இரு மகன்களை குலசை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்.. முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர் கொலை.. தந்தை-மகன்கள் வெறிச்செயல்!
கொலையுண்ட இளைஞர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 18:49 PM IST

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே உள்ள பூங்காவில் ஒரு இளைஞர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக குலசை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை செய்யப்பட்டு கிடந்தது உடன்குடி, வில்லி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது மகன் வேல்முருகன் ( 26 வயது) என்பது தெரியவந்தது. அவரது அருகே கிடந்த செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில், அது தூத்துக்குடி மாவட்டம், திரேஷ்புரம் மாதவன் காலனியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் மகன் காளிராஜ் ( 40 வயது) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

குலசேகபட்டினத்தில் கொலையுண்டு கிடந்த இளைஞர்

அதன் அடிப்படையில், போலீசார் அந்த காளிராஜை படித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதில், நேற்று புதன்கிழமை இரவு காளிராஜ் மற்றும் அவரது மகன்களான முத்து விஜய் ( 18 வயது), மற்றொரு மகன் இசக்கி ராஜா ( 18 வயது) ஆகிய மூவரும் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு, இவர்களுக்கும் வேல்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பாத்திரம் அடைந்த காளிராஜ் மற்றும் அவரது மகன்கள் ஆகிய மூவரும் சேர்ந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க: உணவுப்பழக்கம் குறித்து இழவாகப் பேசிய ஆசிரியர்.. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. கோவையில் சோகம்!!

கொலை சம்பவத்தின் பரபரப்பு பின்னணி

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, காளிராஜ் மற்றும் அவரது மகன்கள் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி வந்த பின்னர் தான், காளிராஜின் செல்போன் சம்பவ இடத்திலேயே எதிர்பாராத விதமாக விட்டு விட்டு சென்றது தெரிய வந்தது. அந்த செல்போன் மூலமாகவே இந்த கொலை சம்பவமும், இதில் ஈடுபட்ட நபர்களின் அடையாளமும் தெரியவந்துள்ளது.

தந்தை- 2 மகன்கள் கைது- சிறையில் அடைப்பு

இந்த தகவல்களின் அடிப்படையில், குலசேகரன் பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து காளிராஜ் மற்றும் அவரது இரு மகன்கள் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் பக்தர்கள் விரத நிறைவு பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கு.. சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி உள்பட மேலும் இருவர் கைது.. போலீசார் அதிரடி!!

Follow Us