AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உணவுப்பழக்கம் குறித்து இழவாகப் பேசிய ஆசிரியர்.. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. கோவையில் சோகம்!!

Coimbatore School Student Case: கோவையில் 11-ஆம் வகுப்பு மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சாதி ரீதியாகத் திட்டியதாகவும் மாட்டுக்கறி குறித்துக் கேட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் பள்ளி ஆசிரியர் விஜயகுமார் பீலமேடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவுப்பழக்கம் குறித்து இழவாகப் பேசிய ஆசிரியர்.. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. கோவையில் சோகம்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Oct 2026 13:31 PM IST

கோவை, அக்.22: தமிழகத்தில் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் சாதி ரீதியான பாகுபாடுகள் குறித்து அவ்வப்போது வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கோவையில் நிகழ்ந்துள்ள ஒரு சோகச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அகிலன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தன் மகன் தற்கொலைக்குப் பள்ளியின் ஆசிரியர்தான் காரணம் என்றும், சாதி ரீதியாகவும் உணவுப்பழக்கம் குறித்தும் தன்னைத் தொடர்ந்து இழிவாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் மாணவனின் பெற்றோர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு தற்போது தொடர்புடைய பள்ளி ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க: சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நாளை முதல் புறநகர் மின்சார ரயிலில் அறிமுகமாகும் ஏசி வசதி.. முழு விவரம்!!

பெற்றோரின் குற்றச்சாட்டும், வழக்குப் பதிவும்:

உயிரிழந்த மாணவன் அகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள புகாரின்படி, பள்ளியில் பயிலும்போது அந்த மாணவனை ஆசிரியர் சாதி ரீதியாகவும், அவன் சாப்பிடும் உணவு முறை குறித்தும் இழிவான முறையில் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அகிலன், பீலமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. தன் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு பீலமேடு காவல் நிலையம் முன்பு பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், உரிய வழக்குப்பதிவு செய்யும் வரை உடலை வாங்க மறுத்து நள்ளிரவு வரை காத்திருந்தனர். இதனையடுத்து, பொதுமக்களின் போராட்டமும் தீவிரமானதை அடுத்து, பள்ளி ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் சக மாணவர்கள் இருவர் உள்பட மொத்தம் நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆசிரியரின் அதிரடி கைது, தீவிர விசாரணை:

வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபர்களைத் தேடும் பணியில் பீலமேடு போலீசார் தீவிரமாக இறங்கினர். இதன் தொடர்ச்சியாக, மாணவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகப் புகாருக்குள்ளான பள்ளி ஆசிரியர் விஜயகுமாரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தற்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரிடம், மாணவனிடம் எவ்வாறு நடந்து கொண்டார், சாதி ரீதியாகத் துன்புறுத்தினாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: வாடிக்கையாளர் போல நடித்து கைவரிசை.. கடையில் 4 செல்போன்கள்- பணம் திருட்டு… கோவையில் துணிகரம்!

வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள்:

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் ஏனைய மாணவர்களிடமும் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைத் திட்டங்களைச் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். பள்ளி மாணவன் ஒருவன் சாதி ரீதியான பாகுபாட்டாலும் ஆசிரியரின் கொடுமையாலும் உயிரைவிட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் கல்வி வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களில் இதுபோன்ற வன்கொடுமைகள் இனி நடைபெறாமல் இருக்கத் துறைசார்ந்த அதிகாரிகள் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow Us