AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாடிக்கையாளர் போல நடித்து கைவரிசை.. கடையில் 4 செல்போன்கள்- பணம் திருட்டு… கோவையில் துணிகரம்!

Coimbatore Cell Phones Theft : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள கடையில் வாடிக்கையாளர் போல வந்து கடை ஊழியரை திசை திருப்பி விலை மதிப்புடைய 4 செல்போன்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர் திருடி சென்றார்.

வாடிக்கையாளர் போல நடித்து கைவரிசை.. கடையில் 4 செல்போன்கள்- பணம் திருட்டு…  கோவையில் துணிகரம்!
செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர்.
Sekaran S
Sekaran S | Published: 20 Oct 2026 20:44 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி பகுதியில் உள்ள செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல நடித்து புதிய செல்போன்கள் மற்றும் மேஜையில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வடவள்ளி பகுதியில் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல வந்த ஒருவர் கடையில் வைக்கப்பட்டிருந்த செல்போன்களின் விலை குறித்து கேட்டறிந்தார். அப்போது, கடையில் இருந்த ஊழியர் ரூ.30 ஆயிரம் மதிப்பு உள்ள செல்போன் மாடல்களை காண்பித்துள்ளார். இதை பார்த்த அந்த நபர் தனக்கு 2 செல்போன்கள் தேவை என்றும், அதற்கான பணத்தை ரொக்கமாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் மையத்துக்கு கடை ஊழியரை அனுப்பி வைத்த நபர்

இதை நம்பிய கடை ஊழியர் தற்போது கலையில் செல்போன்கள் ஸ்டாக் இல்லை, நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வர வேண்டிய அந்த நபர் பிற்பகல் 3 மணி அளவில் கடைக்கு வந்திருந்தார். அப்போது, அந்த நபர் தனது கையில் ரொக்கம் இல்லை. ஏடிஎம்மில் தான் பணம் உள்ளது என்று தெரிவித்தார். அதன்படி, ஏடிஎம் மையத்துக்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக கூறி சென்றார்.

மேலும் படிக்க: காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ. கண்ணத்தில் பளார்… தவெக நிர்வாகி உள்பட இருவர் அதிரடி கைது.. திருவண்ணாமலையில் பரபர சம்பவம்!

கடை ஊழியரை நூதனமாக திசை திருப்பிய மர்ம நபர்

இதற்காக, அந்த கடை ஊழியர் தனது இரு சக்கர வாகனத்தை அவரிடம் கொடுத்துள்ளார். இதற்கு, அந்த மர்ம நபர் தனது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், என்னால் வாகனத்தை இயக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், எனது ஏடிஎம் கார்டை தருகிறேன் நீங்களே ஏடிஎம் மையத்துக்கு சென்று பணத்தை எடுத்து வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய கடை ஊழியர் ஏடிஎம் கார்டை வாங்கிக்கொண்டு பணம் எடுப்பதற்காக வெளியே சென்றார்.

4 செல்போன்கள் மற்றும் பணம் திருட்டு

அந்த சமயத்தில், அந்த மர்ம நபர் ஷோக்கேஸில் வைக்கப்பட்டிருந்த 4 புதிய செல்போன்கள் மற்றும் மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து கடைக்கு திரும்பிய ஊழியர், செல்போன் மற்றும், பணம் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!

Follow Us