AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.15 லட்சத்தை பறிகொடுத்த கேரள மீன் வியாபாரி.. சிறை காவலர் உள்பட இருவரை தூக்கிய போலீஸ்.. கோவையில் பரபர சம்பவம்!

Kovai Prison Guard Arrested : கோயம்புத்தூர் மாவட்டத்தில் கேரள மீன் வியாபாரியிடம் ரூ. 15 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் மத்திய சிறை காவலர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை போலீசார் தேடி வருகின்றனர் .

ரூ.15 லட்சத்தை பறிகொடுத்த கேரள மீன் வியாபாரி.. சிறை காவலர் உள்பட இருவரை தூக்கிய போலீஸ்.. கோவையில் பரபர சம்பவம்!
கைதான இருவர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 16:55 PM IST

கேரள மாநிலம், மணப்புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்லாம். மீன் வியாபாரியான இவர், கடந்த செப்டம்பர் மாதம் வியாபாரம் தொடர்பாக ரூ. 15 லட்சம் பணத்துடன் கோயம்புத்தூருக்கு ரயிலில் வந்திருந்தார். அப்போது, அவர் போத்தனூர் ரயில் நிலையத்துக்கு வந்த நிலையில், அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அவர் வைத்திருந்த ரூ. 15 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக மீன் வியாபாரி முகமது அஸ்லாம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர்.

இருவரை கைது செய்த போத்தனூர் போலீசார்

அத்துடன், மீன் வியாபாரியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் குறித்த அங்க அடையாளங்களை போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையிலும், விசாரணை தீவிர படுத்தப்பட்டது. அதன்படி, இதில் தொடர்புடைய நபர்களின் அடையாளங்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில், கோயம்புத்தூர் நகரப் பகுதியில் பதுங்கி இருந்த பட்டு ராஜா மற்றும் த்ரீஸ் அகமது ஆகிய இருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் படிக்க: Chennai Crime: இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது! தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

கோவை மத்திய சிறை காவலர் கைது

தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போத்தனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கேரள மீன் வியாபாரியிடம் ரூ. 15 லட்சம் வைப்பறி செய்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் அதிர்ச்சிகரமான தகவலும் வெளியானது. அது என்னவெனில், கேரளா மீன் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பட்டு ராஜா என்பவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் காவலராக பணிபுரிந்து வருவது  என்பது ஆகும். இதைத் தொடர்ந்து, இருவர் மீதும் போலீசார் வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

வழிப்பறியில் தொடர்புடை மேலும் இருவருக்கு வலைவீச்சு

அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், இருவரும் கோயம்புத்தூர் சிறையில் அடைத்தனர். அத்துடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வழிப்பறி சம்பவத்தில் சிறை காவலர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கு.. சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி உள்பட மேலும் இருவர் கைது.. போலீசார் அதிரடி!!

Follow Us