AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Chennai Crime: இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது! தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

Youtuber Jason Samuel Arrested: இன்ஸ்டா பிரபலம் ஹரிஷை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Crime: இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது! தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 22 Oct 2026 12:11 PM IST

அக்டோபர் 22, 2026: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி, சைபர் புல்லியிங் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேலை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ் (27), கடந்த நான்கு ஆண்டுகளாக நிதி ஆலோசனை மற்றும் மேலாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ‘Financewithharishofficial’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பிரபலமான இவர், 13 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டிருந்தார்.

அவதூறு வீடியோ வெளியிட்டதாகப் புகார்!

கடந்த 18ஆம் தேதி, ‘thejasonsamuel.com’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் யூடியூபர் ஜேசன் சாமுவேல், தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் ஹரிஷ் மீது ஆதாரமற்ற மோசடிக் குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சமூக வலைதளச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஹரிஷுக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பி, அவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்ததுடன், ஹரிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளாகப் பராமரித்து வந்த தனது கணக்கு முடக்கப்பட்டதால் ஹரிஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது. பின்னர், அவருக்கு ஆதரவாகப் பல யூடியூபர்கள் வீடியோக்களை வெளியிட்டு, மீண்டும் சமூக வலைதளங்களில் அவர் செயல்பட உதவியதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன்பு வீடியோ வெளியிட்ட ஹரிஷ்!

இந்நிலையில், முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டில் ஹரிஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவில், தனது தற்கொலைக்குக் காரணம் ஜேசன் சாமுவேல் எனக் குறிப்பிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நாளை முதல் புறநகர் மின்சார ரயிலில் அறிமுகமாகும் ஏசி வசதி.. முழு விவரம்!!

மேலும், தன்னிடம் ரூ.3 கோடி கேட்டதாகவும், பணம் தராவிட்டால் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கிவிடுவதாகவும், புதிதாகக் கணக்கு தொடங்கினாலும் அதை முடக்கிவிடுவதாக மிரட்டியதாகவும் ஹரிஷ் அந்த வீடியோவில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. புதுச்சேரி எம்.எல்.ஏ. மற்றும் முதலமைச்சரைத் தெரியும் எனக் கூறி, தனது பெற்றோரையும் மிரட்டியதாக ஹரிஷின் தந்தை விநாயகம் புகாரில் தெரிவித்துள்ளார்.

தந்தை அளித்த புகார்; யூடியூபர் கைது!

இதுதொடர்பாக ஹரிஷின் தந்தை விநாயகம், சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஜேசன் சாமுவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளப் பதிவுகள், வீடியோக்கள் மற்றும் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: எல்.முருகன் ராஜினாமாவால் காலியான ராஜ்யசபா எம்பி பதவி.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!

மேலும், ஹரிஷ் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ, சமூக வலைதள இணைப்புகள், வீடியோக்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களைப் பாதுகாத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us