AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பழனி முருகன் கோயில் பக்தர்கள் கவனத்துக்கு.. ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்.. நிர்வாகம் அறிவிப்பு!

Palani Murugan Temple Rope Car : பழனி பால தண்டாயுதபாணி முருகன் கோயிலில் ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 5- ஆம் தேதி வரை நிறுத்தம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது .

பழனி முருகன் கோயில் பக்தர்கள் கவனத்துக்கு.. ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்.. நிர்வாகம் அறிவிப்பு!
பழனி ரோப் கார் சேவை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 17:25 PM IST

தமிழகத்தில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் 3- ஆம் படை வீடு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ளது. பழனி பால தண்டாயுதபாணி கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அவர்கள், கோவிலின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்வதற்கு படி பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் ஆகிய வசதிகள் இருந்து வருகிறது. இதில், ரோப் கார் சேவையில் சில நிமிடங்களில் மலை கோவிலுக்கு செல்ல முடியும் என்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் மத்தியில் இந்த சேவைக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ரோப் கார் கியர் ஷாப்ட்டில் பழது

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 20- ஆம் தேதி காலை சுமார் 11 மணி அளவில் ரோப் கார் சேவை இருந்தபோது திடீரென கியர் பாக்ஸ் ஷாப்டில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, ரோப் காரில் பழுதடைந்த கியர் பாக்ஸ் ஷாப்ட்டை கோயம்புத்தூரில் உள்ள நிறுவனத்துக்கு எடுத்துச் சென்று சரி செய்யும் பணிகள் மேற்கொள்ள விட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் படிக்க: மதுரை – குருவாயூர் விஸ்டாடோம் கண்ணாடி கூரை ரயில் சேவை தொடக்கம்.. இயற்கை அழகை ரசிக்கலாம்!!

ரோப் கார் ஆன்லைன் சேவை நிறுத்தம்

இந்த சோதனைகள் நிறைவடைந்த பின்னரே, ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பழனி பால தண்டாயுதபாணி முருகன் கோவிலில் கம்பி வட ஊர்தி சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு வரும் நவம்பர் 5- ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, முருகன் கோவிலில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள காரணத்தாலும், மலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் படி ப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் ஆகிய மாற்று வசதிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரோப் கார் சேவை தொடங்கும் தேதி விரைவில் அறிவிப்பு

பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் ரோப் கார் கியர் ஷாப்ட்ஸ் வரைந்து சீரமைக்கும் பணிகளும், ரோப் கார் சேவை தொடங்குவதற்கான பணிகளும் கோவில் நிர்வாகம் தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, விரைவில் ரோப் கார் சேவை தொடங்கும் என்றும், அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னை லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை 4 கி.மீ. உயர்மட்ட மேம்பாலம்! டெண்டர் கோரிய அரசு..

Follow Us