Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Nainar Nagendran

Nainar Nagendran

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனாவார். இவர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள தண்டையார்குளம் என்ற ஊரில் பிறந்தார். திருநெல்வேலி மக்களால் அன்போடு பண்ணையார் என அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் அந்த தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர். ஆரம்பத்தில்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்த அவர் 2001 ஆம் ஆண்டு அமைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து,தொழில், மின்சாரம், கிராமப்புற தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நயினார் நாகேந்திரன் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016 தேர்தலில் தோற்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பாஜகவில் இணைந்தார். 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதேசமயம் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் தற்போது மாநில தலைவராக பதவியேற்றுள்ளார். அவர் பற்றிய செய்திகளை நாம் இங்கு காணலாம்.

Read More

“செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன். இதில், 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணைந்தனர். அதோடு, அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமாவும் அவருடன் தவெகவில் இணைந்தார். அவர்களுக்கு விஜய் உறுப்பினர் அட்டை வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தம்!!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, பாஜக மண்டல மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஒரு கவுன்சிலர் கூட இல்ல… பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம்… – தவெகவுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

Nainar Nagendran Replies to TVK : திமுக மற்றும் பாஜக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை, அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

ADMK BJP Alliance: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து எடுத்த முடிவு இது. இது நயினார் நாகேந்திரன் அல்லது மேடையில் இருப்பவர்களின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது ஒரு இயற்கையான கூட்டணி என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..

Nainar Nagendran: அரியலூர் மாவட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், அரியலூர் மாவட்டமே குப்பைக் குளமாக உள்ளது. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரியலூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும், ஒரு அமைச்சரும் உள்ளனர், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக ஆட்சிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி முறைகேடு மர்மம்.. எப்போது விலகும்? நயினார் நாகேந்திரன் கேள்வி..

Nainar Nagendran On Madurai: பாஜக மாநில தலைவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக குளறுபடிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் முக்கிய நகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான மர்மம் எப்போது விலகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டும் – அண்ணாமலை பேச்சு

2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜகவின் நயினார் இன்று முதல் பரப்புரையை தொடங்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜகவினர் புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டுமென தெரிவித்தார்

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் பேச்சு..

Nainar Nagendran: மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “ 2026 ல் எல்லொரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும், திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினையை பேசவில்லை, பாஜக - அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணியாக உள்ளது” என பேசியுள்ளார்.

மதுரையில் நயினார் பரப்புரை.. கடும் நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி!

Nainar Nagendran Campaign : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2025 அக்டோபர் 12ஆம் தேதி மதுரையில் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கான அனுமதியை மதுரை காவல்துறை வழங்கியுள்ளது. மேலும், கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் பரப்புரை உடனே ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை சம்பவம் – திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Shocking Incident : திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காவல்துறையினர் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதை மறைக்க வழக்குப்பதிவு? சமூக வலைதள கணக்காரளர்கள் கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..

Nainar Nagendran Condemns DMK: 25 சமூக வலைதளக் கணக்குகள் வைத்த நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ தன்னால் நிகழ்ந்த தவறை திரையிட்டு மறைக்க தன்னை கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம்” என குறிப்பிட்டுள்ளார்.

திடீரென சிவி சண்முகத்தை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் பரபரப்பு விளக்கம்!

Nainar Nagendran Meets CV Shanmugam : சமீபத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஜே.பி நட்டாவை சந்தித்து இதுதான் பேசினேன்.. நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?

Nainar Nagendran - JP Nadda: டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “ அக்டோபர் மாதம் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதில் பங்கேற்க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. என்ன மேட்டர்?

Edappadi Palaniswami - Nainar Nagendran Meet : சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து இருந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடந்துள்ளது.