AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு?.. நயினார் நாகேந்திரன் விளாசல்!

Nainar Nagendran criticize vijay: விஜய் காட்டமாக அதிமுகவை விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? ஒரு கவுன்சிலர் கூட ஆகாத அவர், இன்னும் விசிலை வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு?.. நயினார் நாகேந்திரன் விளாசல்!
நயினார் நாகேந்திரன், விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Feb 2026 10:21 AM IST

சென்னை, பிப்ரவரி 06: அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தலைமையில் உருவாகியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் முக்கிய அங்கங்களாக இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க: பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு…தமிழக அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை!

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு:

தேர்தல் நெருங்கும் சூழலில், மேலும் சில கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த ஜனவரி 23-ம் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி, என்டிஏ-வின் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இரட்டை இன்ஜின், டப்பா இன்ஜின், டாப் இன்ஜின்:

அப்போது பிரதமர் மோடி, தமிழகத்தில் “இரட்டை இன்ஜின் ஆட்சி” அமைய வேண்டிய அவசியம் குறித்து பேசியது, மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் “டப்பா இன்ஜின்” என விமர்சனத்தை முன்வைத்தார். தவெகதலைவர் விஜய்யும் “டாப் இன்ஜின்” என கருத்து தெரிவித்து, இந்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மோடி:

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தென் தமிழகத்தின் அரசியல் மையமாக விளங்கும் மதுரையில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மதுரையில் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட அதிமுக மூத்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோருடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்திருந்தார்.

மேலும் படிக்க: தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!

விஜய்யை விமர்சித்த நயினார் நாகேந்திரன்:

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய் காட்டமாக அதிமுகவை விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? ஒரு கவுன்சிலர் கூட ஆகாத அவர், இன்னும் விசிலை வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார் என்று காட்டமாக விமர்சித்துள்ளார். தங்களது கூட்டணியில் விஜய் இடம்பெற வேண்டும் என்று எண்ணி, அதிமுகவும், பாஜகவும் விஜய்யை விமர்சிக்காமல்  அமைதி காத்து வந்த நிலையில், தற்போது வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

Follow Us