Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார்… அப்போ யார் ஊழல் சக்தி? விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி

EPS responds to TVK Vijay: அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக விஜய்க்கு ஒன்றும் தெரியாது. கூட்டணியை யார் வழிநடத்துகிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார்… அப்போ யார் ஊழல் சக்தி? விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி
விஜய் - எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Feb 2026 14:58 PM IST

சென்னை, பிப்ரவரி 4 : அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) பிப்ரவரி 4, 2026 அன்று வெளியிட்டார். குறிப்பாக ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய்யின் (Vijay) குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக விஜய்க்கு ஒன்றும் தெரியாது. கூட்டணியை யார் வழிநடத்துகிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த நிலையில் அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

‘விஜய்க்கு ஒன்றும் தெரியாது’

சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை பிப்ரவரி 4, 2026 அன்று வெளியிட்டார். திமுக ஆட்சியில் வழங்கப்படும் ரூ.1000 மாத உதவித்தொகையை ரூ.2000 ஆக உயர்த்துவது, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தவக தலைவர் விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதையும் படிக்க : எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. டிஜிட்டல் பிரச்சாரம் குறித்து முக்கிய ஆலோசனை..

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய், கரூர் சம்பவம் நடந்த 72 நாட்களுக்குப் பிறகு தான் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகுதான் விஷயம் தெரியுமா? விஜய்க்கு எதுவும் தெரியாது. கூட்டணியை யார் வழிநடத்துகிறார்கள் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்தும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஒரு கட்சியின் தலைவருக்கு இதுவாது தெரிந்திருக்க வேண்டாமா? ஒருமுறையாவது செய்தியாளர்களை சந்தித்து பேசச் சொல்லுங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார். ஆனால் யாரை ஊழல் சக்தி என்று சொல்கிறார்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், எங்களை யாரும் ஊழல் கட்சி என்று சொல்ல முடியாது. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை போலியானவை என நிரூபித்து வெளியே வந்துள்ளேன். அதிமுகவை விட்டு வெளியேறி தவெகவில் சேர்ந்த ஒருவர் தான் ஊழல் வழக்கில் சிறை சென்றவர். அப்படி என்றால் விஜய் யாரை ஊழல் சக்தி என்கிறார். எங்களை குறிப்பிட்டால் அதற்கு தெளிவாக பதில் சொல்வோம் என்று பேசினார்.

இதையும் படிக்க : என் கனவு, என் எதிர்காலம் திட்டம்.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதில், சிறுபான்மையின பெண்களுக்கு வட்டி இல்லாத கடன், ஜல்லிக்கட்டு நடத்த ரூ.5 லட்சம் மானியம், மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி, வயதானவர்களுக்கு ரூ.2000 ஓய்வூதியம், ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி ஆகிய முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.