AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவிரி நீர் விவகாரம்… கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

SC Ordered Release Cauvery Water : காவரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விசாரணையை அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.

காவிரி நீர் விவகாரம்… கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 17 Aug 2026 16:39 PM IST

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் இன்று உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், கர்நாடக அரசு அந்த உத்தரவுகளை முற்றிலுமாக புறக்கணித்து அவற்றை செயல்படுத்த தவறி இருந்தது. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. இன்று திங்கள்கிழமை காலை நிலவரப்படி கர்நாடகா மாநில அணையில் 76 சதவீத அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

தமிழகம் – கர்நாடகம் அரசு தரப்பில் வாதம்

இதேபோல, காவிரி நீர் மேலாண்மை ஆணைய தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய 64 டி. எம். சி. தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. மேலும், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு 52.29 சதவீத நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டிருக்க வேண்டும். இதனால், சுமார் 20 டி. எம். சி. தண்ணீர் நிலுவையில் இருந்து வருகிறது என்று வாதத்தை முன்வைத்திருந்தார். இதற்கு, கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!

காவிரி நீர் விவகாரத்தை மறு ஆய்வு செய்யவேண்டும்

தொடர்ந்து, காவிரி நீர் படுகை பகுதியில் மிக கடுமையான நெருக்கடியை மாநில அரசு எதிர்கொண்டு வருகிறது என்று வாதத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் ஏன் திறக்கவில்லை. இயற்கை கொடுத்த மழை நீரை முழுமையாக தேக்க முடியவில்லை என்ற காரணத்தினாலேயே திறந்து விடப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகதத்துக்கான தண்ணீரை திறந்துவிட உத்தரவு

மேலும், அடுத்த ஒரு வார காலத்துக்கு, அதாவது அடுத்த வாரம் திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 24- ஆம் தேதி) விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழகத்துக்கான தண்ணீரை திறப்பதை கர்நாடகா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனிடையே, கர்நாடக அரசு திறந்து விடாத 21.357 டிஎம்சி தண்ணீரை விடுவிக்குமாறு உத்தரவிட கோரிய கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்

Follow Us