தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்த மு.க ஸ்டாலின்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..
Complaint Against MK Stalin: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அக்டோபர் 3, 2026: தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து தரப்பினர் போட்டியிடுகின்றனர்.
தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கோலி செய்த மு.க ஸ்டாலின்:
இந்த நிலையில், திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தாராபுரத்தில் ரோடு ஷோ மற்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா குறித்து பேசிய அவர், அவருக்கு பல்வேறு பெயர்கள் இருப்பதாகவும், ‘பெட்டிபாமா’, ‘பல்டி பாமா’ என அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், “இந்த உருவத்தை வைத்து அவர் எப்படி பல்டி அடித்தார் என்று தெரியவில்லை” என மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்.. மு.க.ஸ்டாலின், ரகுபதியிடம் விசாரணை நடத்த சிறப்பு குழுவில் மனு!!
இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்ணின் உருவத்தை வைத்து விமர்சிப்பது மற்றும் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
முதல்வர் விஜய் கண்டனம்:
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் தனது சமூக வலைதளப் பதிவில் மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் அவதூறு மற்றும் அநாகரிகமான பேச்சுகள் இடம்பெறுவதாக அவர் குற்றம்சாட்டினார். பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசும் வகையில் திமுக செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
மு.க ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்:
இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக புகார் மனு அளித்தார்.
மேலும் படிக்க: “ஸ்டாலின் பேச்சில் ஆபாசமும் வக்கரமும்!”.. தவெக வேட்பாளர் சத்தியபாமா விவகாரத்தில் கொந்தளித்த விஜய்!
அந்தப் புகார் மனுவில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசும் ஸ்டாலின்:
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, திமுக தலைமையின் அரசியல் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகம் தொடர் வெற்றிகளைப் பெற்று வருவதால் ஏற்பட்ட பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மு.க.ஸ்டாலின் இதுபோன்று பேசியதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக தலைவர்கள் தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி உடல் சார்ந்த இழிச் சொற்களையும் கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி வருவதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதை திமுக தலைவர்கள் நிறுத்த வேண்டும் என்றும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவிடம் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.