கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல்.. அறிவாலயத்தில் நடந்த திமுக ரகசிய கூட்டம்.. துரைமுருகன் கொடுத்த “Thug Reply”
DMK Duraimurugan Latest Pressmeet : கொளத்தூர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தக் ரிப்ளை கொடுத்துள்ளார். அவர் கூறிய கருத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழகத்தில் கொளத்தூர் உள்பட 6 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பங்கேற்ற பொதுச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னது திமுக ஆலோசனை கூட்டமா. அப்படி ஒன்றும் நடக்கவில்லையே. பொருளாகவே வரவில்லை. பிறகு எப்படி ஆலோசனை கூட்டம் நடத்த முடியும். மு. க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, நாங்கள் சும்மாதான் வந்திருக்கிறோம். அறிவாலயத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம் என்று தெரிவித்தார். இடைத்தேர்தல் தொடர்பாக திமுக ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
அறிவாலயத்தில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், தொகுதி நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இடைத்தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் ஏற்படும் தாக்கம் மற்றும் மீண்டும் தோல்வி அடைந்தால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இறுதி முடிவுகளை கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான் எடுப்பார் என்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் 3 முறை வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் அவர் தோல்வியடைந்த நிலையில், தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: அமைச்சரை கையை நீட்டி எச்சரித்தது ஏன்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா
இந்த தேர்தலில், திமுக சார்பில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழக வெற்றிக் கழகத்தின் எம். எல். ஏ. வி. எஸ். பாபு உயிரிழந்ததை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதில், மு. க. ஸ்டாலினுக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேயர் ஆர். பிரியா களமிறங்குகிறாரா
அத்துடன், தேர்தல் தேதி அறிவித்தால் அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் ஸ்டாலின் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, மீண்டும் மு.க. ஸ்டாலின் களமிறங்குவார் என்றும், அதே வேளையில், திமுகவில் பெண் எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவை களமிறக்க ஆலோசனை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வாய்ஜாலத்தை விஜய் நிறுத்துக! தவெக ஆட்சி தானாகவே கவிழும்.. அதிமுக கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை.. எடப்பாடி பழனிசாமி!