AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீனவர்களின் உயிரைக் காக்க கடல் ஆம்புலன்ஸ் திட்டம், காப்பீட்டுத் தொகை உயர்வு … – அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்ட அறிவிப்பு

Fishermen Safety and Insurance Benefits : உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் உயிரைக் காக்க கடல் ஆம்புலன்ஸ் திட்டம், காப்பீட்டுத் தொகை உயர்வு …  – அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்ட அறிவிப்பு
அமைச்சர் ஸ்ரீநாத்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Nov 2026 17:07 PM IST

சென்னை, நவம்பர் 21 : மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், மீனவர்களின் காப்பீட்டு தொகையை 3 மடங்காக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்ச மீன்வளத்துறை அமைச்சர்ர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதராம் மற்றும் உரிமைகளை பாதுகாககும் வகையில் ஒ வ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது.

மீனவர்களின் பாதுகாப்புக்காக கடல் ஆம்புலன்ஸ் திட்டம்

இந்த நிலையில் நிலையில், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், என் அன்பான மீனவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உலக மீன்வள தின நல்வாழ்த்துகள்! மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவது, மீனவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, குடும்பங்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு என நமது முதல்வர் விஜய் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க : மின்வாரிய ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அதனையேற்று, மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை நம் மீனவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இலக்காக வைத்து வடிவமைத்து வருகிறது. குறிப்பாக, மீனவர்களின் இன்னுயிர் காக்க, மீனவர்களின் கடல் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாட்டில் முதன்முறையாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தவும், மேலும் தற்போது ரூ.5 லட்சமாக உள்ள மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை இரண்டு மூன்று மடங்காக உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் அவரது பதிவில், அதேநேரத்தில் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவிப்பதுடன், அரசு விதிகளையும் புயல் எச்சரிக்கையையும் பின்பற்றி மீனவர்கள் பாதுகாப்புடன் இருப்பதுடன், கடல் வளங்களைப் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மீன்வளச் செல்வம் கிடைத்திட உறுதியேற்போம். மீனவர்களின் இடர்பாடுகளில் என்றும் துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். மீனவர் நலன் காப்போம்! கடல் வளம் பாதுகாப்போம்! வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்! “ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் வாழ்த்து

முன்னதாக உலக மீனவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது பதிவில், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிக்க : தவெக ஆட்சியில்.. மக்கள் உயிருக்கும் விவசாயிகள் பயிருக்கும் பாதுகாப்பில்லை.. டி.ஆர்.பி. ராஜா நேரடி தாக்கு!

தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us