Suriya: இந்த வருடத்தை சிறப்பாக்கிய அன்பான ஃபேன்ஸ்.. சீன் பட வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சூர்யா!
Suriya Heartfelt Thanks To Fans Video: தென்னிந்திய சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் பேக் டூ பேக் 3 படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை வழங்கியவர் சூர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சீன். இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றிக்கு, ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி கூறி சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.
திரைப்படத்துறையில் மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டாடப்படும் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரை ரசிகர்கள் “தி ஒன்” (The One) என அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் கடந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் வெளியான படங்கள் தோல்விகளை சந்தித்திருந்தது. இந்நிலையில் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு (Karuppu Movie) திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது 2026 மே மாதத்தில் உலகமெங்கும் வெளியான நிலையில், பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) என்ற படம் வெளியானது. இப்படமும் எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் 3வது திரைப்படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சீன் (Scene Movie).
கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் வெளியான இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, நஸ்ரியா நாயகியாக நடித்திருந்தார். இப்படம் தற்போதுவரையிலும் திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உறுதியானது சூர்யாவின் 50-வது படம்? வைரலாகும் தகவல்
சீன் பட வெற்றியை முன்னிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சூர்யா:
இந்த வீடியோவில் சூர்யா பேசுகையில், “அன்பான ஃபேன்ஸ் தம்பி, தங்கைகள், தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் எனது மரியாதையும் நன்றிகளும். சீன் படத்தை திரையரங்குகளில் பார்த்து, கொண்டாடி, ரிவியூஸ் கொடுத்து, அலசி ஆராய்ந்து, டீகோடிங் செய்து இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறீர்கள். ஒரு படம் வெற்றியானால், அந்த படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர்கள் மற்றும் படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷப்படுவார்கள்.
இதையும் படிங்க: அனைத்தையும் ரசித்துப் பார்ப்பேன்.. திரைப்படங்கள் குறித்து சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!
ஆனால் எங்களை விட, ரசிகர்களாகிய நீங்கள் சந்தோஷப்பட்டுருக்கீர்கள். இந்த வெற்றிக்காக, எவ்வாறு வார்த்தைகளில் நன்றி சொல்லமுடியும் என தெரியவில்லை. படக்குழு சார்பாக எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் மரியாதைகள். இந்த ஆண்டை எனக்கு ஸ்பெஷலாக்கிய அனைவருக்கும் நன்றி” என அந்த வீடியோவில் சூர்யா கூறியுள்ளார்.
சீன் பட வெற்றி தொடர்பாக ரசிகர்களுக்கு நன்றி கூறி சூர்யா வெளியிட்ட வீடியோ பதிவு:
View this post on Instagram
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடித்து மற்றும் தயாரித்த படம்தான் சீன். இந்த படத்தில் நஸ்ரியா, லால் மற்றும் இளம் நடிகர் நஸ்லென் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் கேமியோ வேடத்தில் ஜோதிகா மற்றும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

