தனது 30-வது படத்தில் தீவிரமாக கவனம் செலுத்தும் நடிகர் கார்த்தி… வைரலாகும் தகவல்!
Actor Karthi Next Movie Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படத்தில் படு பிசியாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தற்போது ரசிகர்களிடையே முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி (Actor Karthi). தொடர்ந்து மக்களிடையே அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியது என்றே கூறலாம். அதன்படி இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டசி ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சர்தார் 2.
முதல் பாகம் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தவறியது. இதனைத் தொடர்ந்து தற்போது சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




தனது 30-வது படத்தில் தீவிரமாக கவனம் செலுத்தும் நடிகர் கார்த்தி:
இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, கார்த்தி தற்போது கல்யாண் சங்கர் (மேட் டைரக்டர்) இயக்கும் ‘கார்த்தி 30’ மற்றும் மார்ஷல் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவற்றைத் தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் பணியாற்றவுள்ளார். சுவாரஸ்யமாக, இந்த மூன்று படங்களிலும் அவர் ஒரே மாதிரியான தோற்றத்தில் காணப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் இணையவுள்ள படம், கடைக்குட்டி சிங்கம் பாணியிலான, கிராமப்புற பின்னணி கொண்ட ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கார்த்தி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ளார். தொடர்ந்து பல கமர்ஷியல் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம், தனது திரைப்பட வரிசையை அவர் வலுப்படுத்தி வருகிறார்.
Also Read… நிறைவடைந்தது இரண்டு வானம் படத்தின் டப்பிங்… படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Karthi is currently focused on #Karthi30, directed by #KalyanShankar (Mad Director), and #Marshal. Following these two projects, he will collaborate with #MohanRaja for another film. Interestingly, all three projects are expected to feature the actor in a similar look.
His next collaboration with #Pandiraj, however, is said to be a village-based commercial entertainer on the lines of #KadaikuttySingam, with #Karthi sporting a completely different look.
The actor is strengthening his line-up with a series of back-to-back commercial entertainers.
Source: Valai Pechu
— Movies Singapore (@MoviesSingapore) November 20, 2026
Also Read… நா அது ப்ராங்க் கால்னு நினச்சேன்… நடிகை ஸ்ரீலீலா சொன்ன சுவாரஸ்யமான விசயம்!