வீட்டு கடனை முன்கூட்டியே அடைத்தால் கட்டணம் விதிக்கப்படுமா?.. RBI விதிகள் கூறுவது இதுதான்!
India Home Loan Prepayment | இந்தியர்களுக்கு சொந்த வீடு கனவாக உள்ள நிலையில், கடனை வாங்கியாவது விடு கட்ட வேண்டும் என்பதுதான் பலரது கனவாக உள்ளது. இந்த நிலையில், வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் விதிக்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சொந்த வீடு என்பது இந்தியர்களின் மிகப்பெரிய கனவாக உள்ளது. கடனை வாங்கியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். எனவே தான் வங்கிகள் பொதுமக்களுக்கு வீட்டு கடன் (Home Loan) வழங்க முன் வருகின்றன. பொதுமக்களும் வங்கி கடனை வாங்கி தங்களது சொந்த வீடு கனவை நிறைவேற்றி வருகின்றனர். அவசர தேவைக்கு கடனை வாங்கி கட்டினால் கூட, அந்த கடனை தொடர வேண்டாம், கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக சிலர் கடனை முன் கூட்டியே அடைக்க முயற்சி செய்வர். அவ்வாறு வாங்கிய கடனை முன்கூட்டியே அடைக்கும் பட்சத்தில் சில வங்கிகள் கட்டணம் விதிக்கும்.
இந்த நிலையில், வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைத்தால் வங்கிகள் கட்டணம் விதிக்குமா, அது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய விதிகள் கூறுவது என்ன?
வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைத்தால் அதற்கு கட்டணம் விதிக்கப்படுமா என்று பலரும் கவலையில் இருப்பர். இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடன்களுக்கான முன்கூட்டியே செலுத்தும் கட்டண விதிகள் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக உள்ளன. பொதுமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இந்த புதிய விதிகள் 2026, ஜனவரி 01 முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளன.




இதையும் படிங்க : இனி பிஎஃப் கணக்கில் 10% மட்டும் பணம் இருந்தால் போதும்.. பணம் எடுக்கும் முறையில் அதிரடி மாற்றம்.. இனி கையில் அதிக பணம் இருக்கும்!
மாறும் வட்டி மற்றும் நிலையான வட்டி
ஒருவர் தனது தனிப்பட்ட தேவைக்காகவோ அல்லது வணிக பயன்பாட்டுக்காகவோ மாறும் வட்டி விகிதத்தில் (Floating Rate) கடனை வாங்கினால், அந்த கடனை முன்கூட்டியே அடைக்க எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது. இதனை இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த முறை கடனை வாடிக்கையாளர் பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ எப்போது வேண்டுமானாலும் திருப்பி செலுத்தலாம்.
இதையும் படிங்க : வங்கி லாக்கரில் இருக்கும் தங்க நகைகள் காணாமல் போனால் என்ன ஆகும்?
நிலையான வட்டி கடனுக்கு பொருந்தாது
இதுவே ஒருவர் நிலையான வட்டி முறையில் கடன் வாங்குகிறார் என்றால் இந்த விதி பொருந்தாது. அந்த வகை கடன்களுக்கு வங்கிகள் தங்களது கொள்கைக்கு ஏற்ப 2 முதல் 3 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.