25 நாட்களில் 52 லட்சம் திருமணங்களை எதிர்க்கொள்ளும் இந்தியா.. ரூ.1.52 லட்சம் கோடி வர்த்தகம் எதிர்ப்பார்ப்பு!
Wedding Season Fuels 7.5 Lakh Rupees Crore Business | இந்தியாவில் திருமணம் சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் தான், 25 நாட்களில் நடைபெறும் 52 லட்சம் திருமணங்கள் மூலம் ரூ.7.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது திருமணம் சீசன் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் தான், இந்தியாவில் வெறும் 25 நாட்களில் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடக்க உள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளது. அதாவது, நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரையிலான 25 நாட்களில் மட்டும் இத்தனை திருமணங்கள் நடைபெற உள்ளன. இந்த திருமணங்களை முன்னிட்டு இந்தியாவில் சுமார் 7.5 லட்சம் கோடிகளுக்கு வியாபாரம் நடைபெறும் என CAIT (Confederation of All India Traders) கூறியுள்ளது. இந்த நிலையில், வரும் திருமண சீசன் குறித்து அந்த வணிக அமைப்பு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்
இந்தியர்களை பொருத்தவரை திருமணம் மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. திருமணத்தை மிகவும் சிறப்பாக நடந்த வேண்டும் என்பதற்காக பலரும் மிகவும் அதிகமாக செலவு செய்வர். திருமணத்திற்கு தேவையான தங்க நகைகள், பட்டு புடவைகள், பரிசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் தான், இந்தியாவில் தற்போது திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், அதிகப்படியான திருமணங்கள் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட தினங்களில் பல லட்சம் கோடிகளுக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 2027 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அறிமுகமாகும் MDR?.. வெளியான முக்கிய தகவல்!
என்ன என்ன சேவைகளுக்கு எவ்வளவு செலவு?
இந்த திருமணங்களில் 54 சதவீதம் பொருட்கள் மற்றும் சில்லறை விற்பனையில் இருந்து வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.4.05 லட்சம் கோடி ஆகும். 46 சதவீதம் சேவை மூலம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது ரூ.3.45 லட்சம் கோடி ஆகும். தங்க நகைகள் உள்ளிட்டவற்றின் விற்பனை மூலம் 90,000 கோடி வரும் என்றும், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களின் விற்பனை மூலம் ரூ.1.2 லட்சம் கோடி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 10 நாட்களில் ரூ.9,000 குறைந்த தங்கம் விலை.. காரணம் இதுதான்.. இனியும் குறையுமா?
மலிகை பொருட்கள், உணவு விநியோகம் ஆகியவற்றுக்கு ரூ.37,500 கோடியும், மின்சாதன பொருட்கள், பழங்கள், இனிப்பு வகைகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றுக்கு ரூ.30,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சேவைகளுக்கு பல லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதன் முலம் பலருக்கும் தற்காலிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது,