பிறந்து 7 வாரங்களே ஆன குட்டி யானை ராஜாவுக்கு எலும்பு முறிவு – குஜராத் வந்தாரா மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு!
பிறந்து 7 வாரங்களே ஆன ராஜா என்ற குட்டி யானை, தொடைப் பகுதியில் எலும்பு முறிவு காரணமாக அவதிப்பட்டு வருகிறது. இதையடுத்து, அசாமில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள வந்தாரா யானைகள் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பிறந்து 7 வாரங்களே ஆன ராஜா என்ற குட்டி யானை, தொடைப் பகுதியில் எலும்பு முறிவு காரணமாக அவதிப்பட்டு வருகிறது. இதையடுத்து, அசாமில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள வந்தாரா யானைகள் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஆனந்த் அம்பானியின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு குட்டி யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
பிறந்து 7 வாரங்களே ஆன குட்டி யானை ராஜாவுக்கு எலும்பு முறிவு
அசாம் மாநிலம் கோகமுக் பகுதியில் கடந்த 2026 அக்டோபர் 2 அன்று பிறந்த ராஜா என்ற குட்டி யானை பிறந்த சில மணி நேரங்களிலேயே எதிர்பாராத சம்பவம் காரணமாக அதன் வலது காலில் உள்ள தொடை எலும்பு முறிந்தது. குட்டி யானை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய் யானை அச்சமடைந்ததால், குட்டியை உதைத்துள்ளது. இதில் குட்டியானையின் வலது தொடையில் உள்ள முக்கிய எலும்பான ஃபெமர் (முழுமையாக முறிந்தது.
இதன் காரணமாக ராஜாவால் எழுந்து நிற்கவோ, தனது உடல் எடையைத் தாங்கிக்கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், பிறந்தவுடன் தாயிடம் இருந்து கிடைக்க வேண்டிய முதல் பால் எனப்படும் சீம்பாலையும் குட்டி யானை தவறவிட்டது. புதிதாகப் பிறக்கும் விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் சீம்பால் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், ராஜாவுக்கு ஆரம்பத்திலேயே உடல்நலச் சவால்கள் ஏற்பட்டன.
சிகிச்சை அளிக்க முன்வந்த வந்தாரா மருத்துவக் குழு
குட்டி யானையின் நிலை குறித்து அதன் பராமரிப்பாளர்கள் உதவி கோரியதைத் தொடர்ந்து, வந்தாரா அமைப்பின் கால்நடை மருத்துவக் குழுவினர் அக்டோபர் 8ஆம் தேதி ராஜாவைப் பரிசோதித்தனர். எக்ஸ்ரே பரிசோதனையில் தொடை எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முறிந்த காலுக்கு பிளாஸ்டர் மற்றும் கட்டுகள் போட்டு மருத்துவர்கள் நிலைப்படுத்தினர். தொடர்ந்து அக்டோபர் 10, 2026 அன்று ராஜா அதன் உரிமையாளரின் போஹுமாரா பகுதியில் உள்ள வீட்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக குட்டி யானை நடப்பதில் சிரமம் இருந்ததால், அதன் உடல் எடையை முறிந்த காலில் செலுத்தாமல் அசைவதற்கு உதவும் வகையில் சிறிய நீர்சிகிச்சைக் குளமும் அமைக்கப்பட்டது.தொடக்கத்தில் எலும்பு முறிவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்கள் செல்லச் செல்ல ராஜாவின் உடல்நிலையில் மேலும் பல சிக்கல்கள் ஏற்பட்டன.
குட்டி யானைக்கு வயிற்றுப்போக்கு, பாக்டீரியா தொற்று, ரத்தத்தில் சர்க்கரை அளவு மீண்டும் மீண்டும் குறைதல், கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக வந்தாரா தெரிவித்துள்ளது. நீண்ட நேரம் படுத்த நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், உடலில் அழுத்தம் காரணமாகப் புண்களும் உருவாகியுள்ளன. இதுதவிர, தொப்புள் பகுதியில் குடலிறக்கப் பாதிப்பும் பொதுவான உடல் பலவீனமும் கண்டறியப்பட்டுள்ளன. பல வாரங்களாகத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் ராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேம்பட்ட மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
அசாமில் இருந்து குஜராத்துக்கு விமானத்தில் பயணம்
Baby Elephant Raja Airlifted From Assam to Vantara for Life-Saving Treatment 🐘
#ElephantRaja https://t.co/6cxIU16pYU
— TV9 Telugu (@TV9Telugu) November 20, 2026
ராஜாவை அசாமில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள வந்தாரா யானைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆனந்த் அம்பானியின் ஆதரவுடன் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நவம்பர் 20, 2026 வெளியிட்ட அறிக்கையில், கவுகாத்தியில் இருந்து ஜாம்நகருக்கு விமானம் மூலம் குட்டி யானை அழைத்துச் செல்லப்படும் என வந்தாரா தெரிவித்துள்ளது.
இந்தப் பயணம் சுமார் 4 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை வழியாக அழைத்துச் சென்றால் 2,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே கால் எலும்பு முறிவு மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானைக்கு நீண்ட சாலைப் பயணம் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் விமானப் போக்குவரத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வந்தாரா நிறுவனர் அனந்த் அம்பானியின் ஆதரவுடன் இந்த விமானப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அவரது உதவியுடன் மேற்கொள்ளப்படும் மூன்றாவது யானை விமானப் போக்குவரத்து இதுவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தில் குட்டியானையை அழைத்துச் செல்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டி பயன்படுத்தப்படவுள்ளது. அதில் படுக்கை வசதிகளும், முறிந்த காலுக்கு உரிய சப்போர்ட்டும் வழங்கப்படும்.
பயணத்தின்போது குட்டி யானையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்காக கால்நடை மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களும் உடன் பயணிக்க உள்ளனர். ஜாம்நகரில் உள்ள வந்தாரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, ராஜாவுக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து, முறிந்த எலும்புக்கான சிறப்பு சிகிச்சை, ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகள் வழங்கப்படும் என வந்தாரா தெரிவித்துள்ளது.