AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு ஒழுங்கு முறை.. விரைவில் வருகிறது புதிய திருத்தம்.. மத்திய அரசு திட்டம்!

Antimicrobial Drugs Regulate : இந்தியாவில் நுண்ணுயிர் மருந்துகள் மருந்துகள் விதிகள் ஒழுங்கு முறையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான கருத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு ஒழுங்கு முறை.. விரைவில் வருகிறது புதிய திருத்தம்.. மத்திய அரசு திட்டம்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Nov 2026 18:25 PM IST

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றின் மேற்பார்வையை வலுப்படுத்தவும், நுண்ணுயிர் எதிர்ப்பு திறனை கலைக்கவும், புதிய மருந்துகளுக்கு பொருந்தக்கூடிய மத்திய ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயிரியல் கிடைக்கும் தன்மை, உயிரியல் சமநிலை மற்றும் நிலைத்தன்மை ஆய்வுகள் போன்ற ஆய்வுகளுக்கான தேவை மற்றும் போதுமான ஒழுங்குமுறை ஆய்வுகள் இல்லாமல் நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்களுக்கான உற்பத்தி உரிமங்கள் வழங்கப்படுவது குறித்த கவலை தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய மருந்தின் வரையறையில், நுண்ணுயிர் எதிர்ப்புகளை சேர்க்கும் நோக்கில், நவம்பர் 6- ஆம் தேதி வரைவு அரசிதழ் அறிவிப்பு மூலமாக புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

உலக பொது சுகாதார அமைப்பு கவலை

நுண்ணுயிர் எதிர்ப்பு என்பது ஒரு முக்கிய உலகளாவிய பொது சுகாதார கவலையாகவும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படும் பிரச்சனையாகவும் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். ஜி-20 புதுடெல்லி தலைவர்களின் பிரகடனமானது ஒருங்கிணைந்த சுகாதாரம் என்ற அணுகுமுறையின் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பு திறனை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. நுண்ணுயிர் கொல்லிகள் என்பவை நுண்ணுயிரிகளை கொள்ளும் அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுக்கும் செயல்பாட்டை மேற்கொள்ளும்.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளே உஷார்! இன்ஸுரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் பைன்.. முக்கிய அறிவிப்பு!

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தின் தரம் உள்ளிட்டவை

நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க அல்லது அவற்றைத் தடுக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் அத்துடன் நுண்ணுயிர்களை குறைப்பதற்கான தோல் அல்லது மேற்பரப்பு பூசப்படும் பொருட்கள் ஆகியவை இவற்றில் அடங்கும். இத்தகைய மதிப்பீடுகள் இல்லாதது நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்களின் தரம், பாதுகாப்பு, செயல்திறனை பாதிக்கக்கூடும். எனவே, தரம் குறைந்த அல்லது செயல் திறனற்ற நுண்ணுயிர் எதிர்ப்புகள், நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் உருவாகி பரவுவதற்கு வழிவகுத்துள்ளது. நோயாளிகளின் பாதுகாப்புக்கு அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறியது.

நுண்ணுயிர் மருந்து விதி ஒழுங்குமுறையில் மாற்றம்

இந்தத் திருத்தத்தின் மூலமாக 2019- ஆம் ஆண்டு விதியின் கீழ், புதிய மருந்துகளுக்கு பொருந்தக் கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை கொண்டுவர முடியும். அதன்படி, உற்பத்தியாளர்கள் சம்பந்தப்பட்ட மாநில உரிமம் வழங்கும் ஆணையத்திடம் உற்பத்தி உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு மத்திய உரிமம் வழங்கும் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இது மத்திய ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்தவும், நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்களின் தரம், பாதுகாப்பு, செயல்திறனை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்தியாவின் முதல் உள்நாட்டு பறவைக் காய்ச்சல் தடுப்பூசி அறிமுகம்! கோழிப்பண்ணைத் தொழிலுக்கு புதிய நம்பிக்கை.. நாளை முதல் அமல்..

Follow Us