AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vijay Antony: இரத்த உறவையும் தாண்டிய தந்தை பாசம்.. விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படம் எப்படி இருக்கு?

Appa Kutty Movie Review: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடந்து திரைப்படங்களை வெளியிட்டுவருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பிலும், இயக்குநர் மு.மாறனின் இயக்கத்திலும் உருவாகிவந்த படம்தான் அப்பா குட்டி. இப்படம் இன்று (20/11/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் என்ன என விவரமாக பார்க்கலாம்.

Vijay Antony: இரத்த உறவையும் தாண்டிய தந்தை பாசம்.. விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படம் எப்படி இருக்கு?
அப்பா குட்டி திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Nov 2026 16:47 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மற்றும் இசையமைப்பாளராக இருந்துவருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் ஏற்கனவே நூறு சாமி (Nooru Saami) என்ற படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதை இயக்குநர் சசி இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், சிறப்பாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பின் 2வது படமாக வெளியாக காத்திருந்த படம்தான் அப்பா குட்டி (Appa Kutty Movie). இதை அறிமுக இயக்குநர் மு. மாறன் (Director Mu. Maran) இயக்க, விஜய் ஆண்டனி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இன்று (20/11/2026) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்த படமானது வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறதாம். இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் பற்றி தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜெயித்தாரா துல்கர்? ‘ஆகாசம்லோ ஓகா தாரா’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!

விஜய் ஆண்டனி மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் அப்பா குட்டி படம் எப்படி இருக்கு:

இந்த அப்பா குட்டி திரைப்படமானது இரத்த உறவையும் தாண்டிய ஒரு தந்தையின் பாசம் குறித்த கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் மகள்கள் வளரும் அப்பாக்கள் அனைவருக்கும் அர்ப்பணம் என கூறலாம். இப்படம் ஓரளவு நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டது. சிறப்பான பொழுதுபோக்கு மற்றும் பீல் குட் தருணங்களுடன் கூடிய ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதைக்களம் கொண்ட படமாக அமைந்துள்ளது.

அப்பா குட்டி படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கு:

இப்படத்தில் விஜய் ஆண்டனியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறப்பான வேடத்தில் நடித்துள்ளார். நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இதற்கு முன் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, வித்தியாசமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் பக்ஸ் தனது நடிப்பால் நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு மேலும் உயிர் கொடுக்கிறார். இதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லிதான்யா தனது சிரமமற்ற நடிப்பின் மூலம் ஆடியன்ஸை கட்டிப்போட்டார் என கூறலாம். இவர் ஜன நாயகன் படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: விறுவிறுப்பான ஸ்பை திரில்லர்… தனுஷின் ஓ.எம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள்!

அப்பா குட்டி படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா?:

இப்படத்தின் முதல் பாதியில் தந்தை – மகள் பாசம், ப்ரீத்தியின் ஒருதலை காதல் போன்ற லேசான தருணங்கள் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் சில சுவாரஸ்யமான திருப்பங்களும், மேலும் இறுதிவரை பதற்றம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மொத்தத்தில், இப்படமானது குறைகளும் இல்லாமல் உங்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் ஒரு எமோஷனல் படமாகும். பீல் குட் மற்றும் அப்பா மகள் பாசமுள்ளவர்கள் இந்த படத்தை நிச்சயமாக திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us