AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போய் கண்ணாடிய பாரு மேன்… பிக் பாஸில் டிடிஃஎப் வாசனின் கேம் பிளே-வால் காண்டான பிருத்வி – ஜேசன்!

TTF Vasan Bigg Boss: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக தமிழில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே-கான டாஸ்குகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று (20/11/2026) வெளியான 2வது ப்ரோமோவில் டிடிஃஎப் வாசனின் கேம் பிளே-வினால் பிருத்வி மற்றும் ஜேசன் காண்டானது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

போய் கண்ணாடிய பாரு மேன்… பிக் பாஸில் டிடிஃஎப் வாசனின் கேம் பிளே-வால் காண்டான பிருத்வி – ஜேசன்!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Nov 2026 13:50 PM IST

விஜய் டிவியில் (Vijay Tv) சின்னத்திரை ரசிகர்கள் ரசித்துவரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது 2017ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டிலும் புது புது சீசனாக வெளியாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026 செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக தொடங்கியிருந்தது. மொத்தமாக 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தற்போது 11வது வாரத்தின் முடிவில் வெறும் 10 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுட்டுவரும் நிலையில், வாரம் வாரம் போட்டியாளர்களை சந்தித்து சரமாரியான கேள்விகளை எழுப்பிவருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 11ல் இந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே-கான டாஸ்குகள் மற்றும் போட்டிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் இன்று (20/11/2026) வெளியான 2வது ப்ரோமோவில் டிடிஃஎப் வாசனின் கேம் பிளே குறித்து ஜேசன் மற்றும் பிருத்வி காண்டானது குறித்து காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேம் சேஞ்சர்.. பிக் பாஸில் கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்கில் பிரித்வியை போட்டுத்தள்ளிய டிடிஃஎப் வாசன்! – ப்ரோமோ!

டிடிஃஎப் வாசனின் கேம் பிளே-வால் காண்டான பிருத்வி – ஜேசன்:

இந்த ப்ரோமோவில், பிருத்வி, டிடிஃஎப் வாசனிடம், “ஒரு வாரமாவது ரூல்ஸ் புரிந்து, அந்த ரூல்ஸ்ல விளையாடுவியான்னு நா பாக்குறேன். எல்லா வாரத்திலும் சுவாரஸ்யப்படுத்துறேன் என தலைகீழாகதான் குதிப்பேன்-னு.. குதிச்சிட்டு இருக்க என கூறினார். உடனே வாசன், “நீ என்ன கொல பண்ணனும் நினைப்ப.. நா உனக்காக ஒரு கொல பண்ணனுமா?” என கூறினார். உடனே அமர்ந்திருந்த முனியம்மாள், ” அவன் செய்தது சரிதான்” என சொன்னார்.

இதையும் படிங்க: ஜெயித்தாரா துல்கர்? ‘ஆகாசம்லோ ஓகா தாரா’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!

உடனே ஜேசன், “கேவலமான கேம்” என டிடிஃஎப் வாசன்-ஐ பார்த்து கூறினார். உடனே டிடிஃஎப் வாசன், “நீதான் கேவலமான நபர், உன்னுடைய கிச்சன் துறையிலே ஊழல் பண்ணுவ.. அடுத்தவங்களுக்கு சக்கரை தராமல்.. அது உனக்கு கேவலம் கிடையாது. ஆனால் நான் ஆடும் கேம்தான் கேவலமா… போய் உன் மூஞ்சிய கண்ணாடில பாரு” என அதில் அவர் கூறியிருந்தார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் டிடிஃஎப் வாசனுக்கு ஆதரவாக இந்த ப்ரோமோவின் கீழ் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 75வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த நிகழ்ச்சியானது 11வது வாரத்தின் முடிவில் உள்ளது. அந்த விதத்தில் இந்த வாரத்திலும் நிச்சயம் எவிக்ஷன் இருக்கும். கடந்த இரு வாரங்களும் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில், இந்த வாரத்தில் ஒரு எவிக்ஷன் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பிருத்வி அல்லது முகேஷ் என இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us