AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெளிய துப்புவாங்க பாரு அப்போ தெரியும்.. ஜேசனிடம் வெறித்தனமாக பேசிய தன்யா – அனல் பறக்கும் ப்ரோமோ!

Bigg Boss Tamil 10 Promo: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியிலானது 11வது வாரத்தின் முடிவில் உள்ளது. அந்த விதத்தில் இன்று (19/11/2026) வெளியான 4வது ப்ரோமோவில், ஜேசன் மற்றும் தன்யா இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

வெளிய துப்புவாங்க பாரு அப்போ தெரியும்.. ஜேசனிடம் வெறித்தனமாக பேசிய தன்யா – அனல் பறக்கும் ப்ரோமோ!
தன்யா Vs ஜேசன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Nov 2026 19:34 PM IST

விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தமிழில் தொகுத்துவரும் ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்படும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 2017ம் ஆண்டு முதல் தமிழில் ஆரம்பமான நிலையில், இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தில் இறுதியை எட்டியுள்ளது. மொத்தமாக 100 நாட்கள் நடைபெறும் இந்த நிலசியில் 74 நாட்கள் கடந்துள்ளது. இந்த வாரம் ஆரம்பமானத்திலிருந்தே டிக்கெட் டூ ஃபினாலேகான டாஸ்குகள் நடந்துவருகிறது. இந்நிலையில் தினமும் ஒவ்வொரு டாஸ்குகள் நடந்துவரும் நிலையில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கை (Ticket to Finale Task) யார் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் இன்று (19/11/2026) கான்ட்ராக்ட் கில்லாடி என்ற டாஸ்க் நடந்துமுடிந்தது. இதில் அன்சர், முகேஷ் மற்றும் ஜேசன் என மூவரும் பூட்ட கேஸாக ஒரு பேரலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சமயத்தில் தன்யா மற்றும் ஜேசன் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், அது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அவளுக்கென புதிதாய் மாறினோம்.. காவியா மாறனுடன் வீடியோ பகிர்ந்த அனிருத்!

ஜேசனிடம் வாய்க்கு வாய் பதிலடி கொடுத்து பேசிய தன்யா:

இந்த் ப்ரோமோவில் தன்யா, “நீங்கதான் என்ன பத்தி பேசுனீங்க” என ஜேசனை நோக்கி கை நீட்டி பேசியிருந்தார். உடனே ஜேசன், “என்னிடம் கை நீட்டி பேசாதீங்க” என அவரிடம் கோபமாக நடந்துகொள்வதுபோல் செய்தார். மேலும் அதன் பிறகும் தன்யா, அவரிடம் கை நீட்டி அவரை கோபப்படுத்தும் விதத்தில் பேசியிருந்தார். உடனே தன்யா, “உடனே வீம்புக்கு செய்வீர்கள் அதுமட்டும்தான் உங்களால் முடியும்,.. வேறு எதுவும் முடியாது” என கூறினார். ஜேசன் அதற்கு, “அய்யயோ அய்யயோ” என கோபப்படுத்தும் விதத்தில் பேசினார். தன்யா அதற்கு, “மற்றவர்களின் சக்கரையை எடுத்து சாப்புட்டுருக்க.. சோத்துல விளையாடுறது நீதாண்டா… போடா.. நீ என்ன பண்ணுறியோ அது தப்பு” என கூறினார்.

இதையும் படிங்க: ஃபினாலே வாரப் போட்டியில் மற்றொரு டாஸ்க்.. அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!

மேலும் ஜேசன் அவரிடம் “அய்யயோ அய்யயோ” என்றே பேசிக்கொண்டிருந்தார். உடனே வந்த சாதிகா, அவர்கள் இருவரையும் விலக்க முயற்சி செய்தார். உள்ளே சென்ற தன்யா, “உன்ன வெளிய துப்புவாங்க பாரு அப்போ தெரியும்” என கூறிக்கொண்டே சென்றார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் தன்யாவின் ஆதரவாளர்கள், அவருக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா என கருத்துக்களை வெளியிட்டுவருகிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 74வது நாளின் 4வது ப்ரோமோ எக்ஸ் பதிவு :

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் அதிதடியாக இருந்துவருகிறது. வார இறுதியை எட்டிய நிலையில், இந்த டாஸ்கில் யார் வெற்றியாளராவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us