AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 சரிவு.. 10 நாட்களில் ரூ.12,000 குறைந்த தங்கம் விலை

Chennai Gold Rate: நவம்பர் 20ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.470 குறைந்துள்ளதாகவும், இதனால் ஒரு சவரனுக்கு ரூ.3,760 சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,510க்கும், ஒரு சவரன் ரூ.92,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 சரிவு.. 10 நாட்களில் ரூ.12,000 குறைந்த தங்கம் விலை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Nov 2026 10:07 AM IST

நவம்பர் 20, 2026: சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் ரூ.12,000 வரை குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், நவம்பர் 20ஆம் தேதியான இன்றும் தங்கம் விலை அதிரடியாகச் சரிந்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து விற்பனையானது. இதையடுத்து 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜூன் மாதம் வரை தங்கத்தின் விலை உச்சத்தில் நீடித்தது. ஜூலை மாதம் முதல் விலை கணிசமாகக் குறைந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இதற்கிடையே, நவம்பர் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, நவம்பர் 17ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 11 மாதங்களுக்குப் பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் சரிந்து ரூ.99,760க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இந்த நிலையில், நவம்பர் 20ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.470 குறைந்துள்ளதாகவும், இதனால் ஒரு சவரனுக்கு ரூ.3,760 சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,510க்கும், ஒரு சவரன் ரூ.92,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,556க்கும், ஒரு சவரன் ரூ.1,00,448க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: வங்கி லாக்கரில் இருக்கும் தங்க நகைகள் காணாமல் போனால் என்ன ஆகும்?

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிவைக் கண்டுள்ளது. நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.200ஐக் கடந்திருந்த நிலையில், தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை குறைவதற்கு என்ன காரணம்?

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு வலுப்பெற்றிருப்பது தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. டாலர் மதிப்பு அதிகரிப்பதால், டாலரில் வர்த்தகமாகும் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறைந்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வேண்டியிருக்கலாம் என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட, வட்டி வருமானம் அளிக்கும் முதலீடுகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: Expired Licenece-க்கு ரூ.10,000 வரை கட்டணம்.. அதிரடி நடவடிக்கை!

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow Us