IPL 2027: பணிச்சுமை, காயம்.. ஐபிஎல் 2027ல் தானாக விலகிய அனுபவ வீரர்கள் பட்டியல்..!
IPL 2027 Players Withdrawn: ஐபிஎல் 2027-க்கான 10 அணிகளும் 184 வீரர்களைத் தக்கவைத்துள்ளன. மீதமுள்ள 66 இடங்களுக்கான மினி ஏலம் டிசம்பர் 16, 2026 அன்று கோவாவில் நடைபெறுகிறது. டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் (பணிச்சுமை) மற்றும் ஜேக்கப் பெத்தேல் (காயம்) ஆகியோர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளனர். ஏலம் இந்திய நேரப்படி காலை 11 மணிக்குத் தொடங்கும்.
ஐபிஎல் 2027-க்கான (IPL 2027) 10 அணிகளின் தக்கவைப்புப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து அணிகளும் இணைந்து 184 வீரர்களைத் தக்கவைத்துள்ள நிலையில், ஏலத்திற்கு 66 இடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. ஆனால், விடுவிக்கப்பட்ட வீரர்களைத் தவிர, அடுத்த சீசனில் விளையாட தாங்களாகவே மறுத்த சில வீரர்களின் பெயர்களும் இதில் அடங்கும். அதன்படி, முழங்கால் காயத்திலிருந்து (Injury) முழுமையாகக் குணமடைவதற்காக, ஜேக்கப் பெத்தேல் ஐபிஎல் 2027 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு முன்னதாக, 2 ஆஸ்திரேலிய அனுபவ வீரர்களும் ஐபிஎல் 2027 தொடரிலிருந்து விலக உள்ளனர். வரவிருக்கும் தொடரிலிருந்து விலகிய வீரர்களின் முழுமையான பட்டியல் இதோ.
ALSO READ: கேகேஆருக்கு கேப்டன் யார்..? ரிங்கு சிங் தலைமை பொறுப்பு ஏற்பாரா?
யார் யார் அந்த வீரர்கள்..?
இதுவரை, மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகிய 3 வீரர்கள் ஐபிஎல் 2027 தொடரிலிருந்து தங்களது பெயர்களை விலக்கிக் கொண்டுள்ளனர்.




டிராவிஸ் ஹெட்:
தனது பணிச்சுமையைக் கையாள்வதற்காக, டிராவிஸ் ஹெட் ஐபிஎல் 2027 தொடரிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாகவே ஹெட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விடுவிப்புப் பட்டியலில் இடம்பெற்றார். 2027ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி நிறைய போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.அதைத் தொடர்ந்து 2027ம் ஆண்டு ஆஷஸ் தொடரும், 2027 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பையும் நடைபெற உள்ளது. இதனால்தான் ஹெட் அடுத்த சீசனில் விளையாட விரும்பவில்லை.
மிட்செல் ஸ்டார்க்:
மிட்செல் ஸ்டார்க்கின் நிலைக்கான காரணமும் பணிச்சுமையைச் சுற்றியே அமைந்துள்ளது. ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணியின் ஒரு முக்கிய அங்கம் ஆவார். கடந்த 2 ஐபிஎல் சீசன்களாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்டார்க், 17 போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜேக்கப் பெத்தேல்:
முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மேனான ஜேக்கப் பெத்தேல், ஐபிஎல் 2027 தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். கடந்த 2 சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய பெத்தேல், தனது முழங்கால் காயத்தில் இருந்து குணமடைவதற்காக அடுத்த சீசனில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் 2027 மினி ஏல விவரம்:
ஐபிஎல் 2027-க்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலகின் மிகவும் பிரபலமான டி20 லீக்கின் அடுத்த சீசனுக்கு முன்னதாக, வீரர் ஏலத்தின் தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்முறை, அணி உரிமையாளர்கள் வீரர்களை ஏலம் எடுப்பதற்காக கோவாவுக்குப் பயணம் செய்வார்கள். ஐபிஎல் 2027 மினி ஏலம், 2026 டிசம்பர் 16 அன்று, ஐடிசி கிராண்ட் கோவாவில் நடைபெறும்.
ALSO READ: தோனியின் அதிரடி பேட்டிங்கை சிலாகித்த சச்சின்.. வைரலாகும் போஸ்ட்!
வீரர் ஏலம் இந்திய நேரப்படி காலை 11:00 மணிக்குத் தொடங்கும். ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்து, புதன்கிழமை இதை உறுதிப்படுத்தியது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏலம் இப்போது இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு, 2026 டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். சரியாக ஒரு வருடம் கழித்து, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி கோவாவில் இந்த ஏலம் நடைபெறும்.