T20 Cricket: டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள்.. யுஸ்வேந்திர சாஹல் புதிய மைல்கல்!
Yuzvendra Chahal History: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹரியானாவுக்காக விளையாடியபோது சாஹல் இதை நிகழ்த்தினார்.
இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை எட்டி வரலாறு படைத்துள்ளார். டி20 வடிவத்தில் 400 விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை சாஹல் பெற்றுள்ளார். ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal) தற்போது 2026 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹரியானா அணிக்காக விளையாடி வரும் நிலையில், தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். போட்டிக்கு முன்பு, 400 ரன்கள் என்ற விக்கெட்கள் எடுக்க சாஹலுக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. சாஹல் இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி, 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது அவர் 402 விக்கெட்டுகளைக் கொண்டுள்ளார். இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், 366 டி20 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ALSO READ: பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்ட்யா.. கேப்டன்ஷியில் மாற்றமா..?




இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகள்
Milestone Unlocked 🔓
Yuzvendra Chahal becomes the first Indian to take 400 T20 wickets. He achieved the feat during his impressive spell of 3/16 to help Haryana beat Tamil Nadu by seven wickets in Indore 👏
#SMAT | @mflone_ | @yuzi_chahal | @haryanacricket https://t.co/ECBllcWacQ
— BCCI Domestic (@BCCIdomestic) November 19, 2026
- யுஸ்வேந்திர சாஹல் – 402 விக்கெட்டுகள்
- புவனேஷ்வர் குமார் – 366 விக்கெட்டுகள்
- ஜஸ்பிரித் பும்ரா – 354 விக்கெட்டுகள்
- பியூஷ் சாவ்லா – 329 விக்கெட்டுகள்
- ரவிச்சந்திரன் அஸ்வின் – 323 விக்கெட்டுகள்
ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் யார்..?
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், டி20 வடிவத்தில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை தன்வசம் வைத்துள்ளார். ரஷித் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 743 டி20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
- ரஷீத் கான் – 743 டி20 விக்கெட்டுகள்
- சுனில் நரைன் – 658 டி20 விக்கெட்டுகள்
- டுவைன் பிராவோ – 631 டி20 விக்கெட்டுகள்
- இம்ரான் தாஹிர் – 593 டி20 விக்கெட்டுகள்
- ஆண்ட்ரே ரஸ்ஸல் – 545 டி20 விக்கெட்டுகள்
யுஸ்வேந்திர சாஹலின் டி20 வாழ்க்கை
யுஸ்வேந்திர சாஹல் இதுவரை 346 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 340 இன்னிங்ஸ்களில் பந்துவீசி, 23.68 சராசரியில் 402 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்பது அவரது சிறந்த பந்துவீச்சாகும். அவரது எகானமி ரேட் 7.77 ஆகும். மீதமுள்ள 46 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, சாஹல் 81 ரன்கள் எடுத்துள்ளார், இதில் அதிகபட்ச ஸ்கோர் 10 ஆகும்.
ALSO READ: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இன்று முதல் தொடக்கம்.. இந்திய அணியின் போட்டி எப்போது?
யுஸ்வேந்திர சாஹல் நீண்ட காலமாக இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யுஸ்வேந்திர சாஹல் இந்தியாவுக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) விளையாடுகிறார். அவர் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. 36 வயதான சாஹல் இந்திய அணியில் தனது இடத்தை மீண்டும் பெற முடியுமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.