வங்கி லாக்கரில் இருக்கும் தங்க நகைகள் காணாமல் போனால் என்ன ஆகும்?
Gold in Bank Locker | தங்கம் நகைகளை பாதுகாப்பாக வைக்க பலரும் வங்கி லாக்கரை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், வங்கி லாக்கரில் இருந்து தங்க நகைகள் காணாமல் போனால் அது குறித்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய குடும்பங்களில் ஒரு பொட்டு தங்கம் (Gold) கூட இல்லாமல் இருக்காது. காரணம், காலம் காலமாக இந்தியர்களின் முதன்மை முதலீடாக தங்கம் உள்ளது. கையில் கொஞம் பணம் இருந்தாலும் கூட தங்கத்தில் முதலீடு செய்வது பலரது வழக்கமாக உள்ளது. தங்கம் நாளுக்கு நாள் விலை உயர்வை சந்தித்துக்கொண்டே செல்கிறது. அதன் காரணமாக தங்கம் வாங்க முடியாத உலோகமாக மாறி வருகிறது. அதிக மதிப்பு கொண்ட தங்கத்தை வீட்டில் வைப்பது சற்று ரிஸ்கானது என்பதால் பலரும் தங்களது தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றை வங்கி லாக்கரில் (Bank Locker) வைக்கின்றனர். இந்த நிலையில், வங்கி லாக்கரில் வைக்கும் தங்க நகைகள் திருட்டு போனால் என்ன செய்வது என்பது குறித்து தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கி லாக்கரில் இருக்கும் தங்க நகைகள் காணாமல் போனால் என்ன ஆகும்?
ஒருவர் வங்கி லாக்கரில் இவ்வளவு தான் தங்க நகைகளை வைத்திருக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயம் செய்யவில்லை. ஒருவர் தான் வாடகைக்கு எடுத்துள்ள வங்கி லாக்கரின் கொள்ளவை பொருத்து அவர் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். அந்த லாக்கரில் வைத்துள்ள வெள்ளி, தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் குறித்து வாடிக்கையாளர்களிடம் கேள்வி கேட்க வங்கிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் முழுவதும் பாதுகாக்கப்படும்.
இதையும் படிங்க : புதிய ஈ காமர்ஸ் விதிகளை அறிமுகம் செய்யும் மத்திய அரசு.. ஜனவரி 1 முதல் அமல்!
பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் மற்றும் வரம்புகள்
தங்கத்தை வங்கி லாக்கரில் வைத்துவிட்டால் அது 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் என நினைக்க கூடாது. லாக்கர்களை வாடகைக்கு மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன. வங்கி லாக்கர்களுக்குள் என்ன என்ன பொருட்கள் இருக்கும் என்பது வங்கிகளுக்கு தெரியாது என்பதால், அந்த பொருட்கள் குறித்து வங்கிகள் எந்தவித பொறுப்பையும் ஏற்க முடியாது.
இதையும் படிங்க : தார் எலெக்ட்ரிக் முதல் புதிய நெக்ஸான் வரை.. இந்தியாவுக்கு வரவுள்ள 5 எலெக்ட்ரிக் SUV!
100 மடங்கு இழப்பீடு
ஆனால், வங்கி ஊழியர்களின் அலட்சியம், தீ விபத்து, கொள்ளை, மோசடி உள்ளிட்ட எதிர்பாராத காரணங்களால் உள்ளே இருக்கும் பொருட்கள் திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில், வாடிக்கையாளர்கள் வழங்கும் வட்டியின் 100 மடங்கு தொகையை வங்கிகள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.