AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price: நகை பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்.. தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது..

Chennai Gold Rate: சென்னையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், நவம்பர் 18ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூ.2,040 குறைந்து ரூ.97,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price: நகை பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்.. தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2026 10:03 AM IST

நவம்பர் 19, 2026: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், நவம்பர் 19ஆம் தேதியான இன்றும் அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.235 குறைந்துள்ளதால், சவரனுக்கு ரூ.1,880 சரிந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சவரனுக்கு ரூ.1,880 குறைந்த தங்கம்

சென்னையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், நவம்பர் 18ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூ.2,040 குறைந்து ரூ.97,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கமான 24 கேரட் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.13,069-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,552-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: டிவிஎஸ் குழுமத்தில் தீவிரமடையும் சொத்து பிரச்னை – வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய மகள் – என்ன நடந்தது?

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை திடீர் சரிவுக்கு என்ன காரணம்?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாகச் சரிந்து வருவதே இந்தியாவிலும், குறிப்பாக சென்னையிலும் தங்கம் விலை குறைவதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.  சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு வலுப்பெற்றுள்ளது.

இதனால் டாலரில் வர்த்தகமாகும் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறைந்துள்ளது.  அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வேண்டியிருக்கலாம் என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட வட்டி வருமானம் தரும் முதலீடுகளில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: புதிய ஈ காமர்ஸ் விதிகளை அறிமுகம் செய்யும் மத்திய அரசு.. ஜனவரி 1 முதல் அமல்!

அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் உயர்வதால், வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான முதலீட்டு ஈர்ப்பு குறைந்துள்ளது. அதேபோல தலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்வதும் விலை சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 18ஆம் தேதி சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3.2 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸ் 3,719.55 டாலர் என்ற 14 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச நிலையை எட்டியது. வெள்ளி விலையும் சுமார் 5 சதவீதம் சரிந்தது.

Follow Us