இருசக்கர வாகன ஹெட்மெட்டுக்கு ஏர் பேக் ஆ?.. இணையத்தை ஆச்சர்யப்படுத்திய வீடியோ!
Motorcycle Airbag Helmet Video Goes Viral | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஹெல்மெட்டில் இருந்து ஏர் பேக் வெளியே வருவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், ஹெல்மெட் தொடர்பான ஆச்சர்யமூட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹெல்மெட்டில் ஏர் பேக்?
போக்குவரத்து நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் வாகனங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தான், சாலையில் செல்லும் நபர்களில் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் சென்றால் சீட் பெல்ட் அணிவது ஆகியவை கட்டாயமாக உள்ளது.




இதையும் படிங்க : ரூ. 81,800 ரொக்கத்தை அலேக்காக தூக்கிய குரங்கு.. பணத்தை அள்ளிவீசிய சம்பவம்!
கார்களில் கூடுதல் பாதுகாப்பாக ஏர் பேக் வழங்கப்படும். அதாவது, கார் வேகமாக எதன் மீதாவது மோதும்போது உள்ளே அமர்ந்திருக்கும் நபர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இருசக்கர் வாகனத்தில் செல்லும் நபரின் ஹெல்மெட்டில் இருந்து ஏர் பேக் வருவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
A Chinese company testing out helmets with built in airbags!
Such a clever idea 👏 https://t.co/LEGR3UYnDV
— HOW THINGS WORK (@HowThingsWork_) November 17, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று சென்றுக்கொண்டு இருக்கிறது. அப்போது அந்த வாகனம் கீழே விழும் நிலையில், அந்த வாகனத்தை ஓட்டும் நபரின் ஹெல்மெட்டில் இருந்து ஏர் பேக் வருகிறது. அந்த ஏர் பேக், வாகனத்தை ஓட்டி வந்த நபரையே முழுவதுமாக மூடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : மிஸ்ஸானால் பராமரிப்பாளர் கை காலி.. கோழியை பிடிக்க தாவிய முதலை
அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது உண்மையா என பலரும் வியந்து கருத்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டது என பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.