Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kiss Movie : ஜில்லெலமா.. கவினின் ‘கிஸ்’ படத்திலிருந்து வெளியான 2வது பாடல்!

Kiss Movie Second Single : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின் ராஜ். இவரின் நடிப்பில் மிக ரொமாண்டிக் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகிவருவது கிஸ் திரைப்படம். இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

Kiss Movie : ஜில்லெலமா.. கவினின் ‘கிஸ்’ படத்திலிருந்து வெளியான 2வது பாடல்!
கவினின் கிஸ் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Jun 2025 18:54 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கவின் (Kavin). இவரின் நடிப்பில் இறுதியாக பிளடி பெக்கர்  (Bloody Begger) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருந்தார். இவரின் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் தோல்வியைச் சந்தித்தது என்றே கூறலாம். இப்படத்துடன் அமரன் மற்றும் பிரதர் போன்ற படங்களும் வெளியாகியிருந்தது. அதன் காரணமாக இப்படத்திற்கு பெரும் வரவேற்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து மாஸ்க் (Mask), கிஸ் (Kiss) என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். அதில் அறிமுக இயக்குநரும், நடன கலைஞருமான சதீஷ் கிருஷ்ணனின் (Sathish Krishnan) இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்தான் கிஸ் (Kiss).

இப்படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் சசிகுமாரின் அயோத்தி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திலிருந்து முதல் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து, இரண்டாவது பாடலான ‘ஜில்லெலமா’ என்ற லிரீக்கள் பாடல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் கவின் ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த கிஸ் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல், திருடி என்பதை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது வெளியான ஜில்லெலமா என்ற பாடலை பாடகர் ஆதித்யா ஆர்.கே. மற்றும் பிரியா மாலி இணைந்து பாடியிருக்கின்றனர். தற்போது இந்த பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிஸ் படத்தின் கதைக்களம் இதுவா ?

நடிகர் கவின் ராஜ் முன்னணி நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. இப்படத்தை பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலமாகத்தான் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த கிஸ் படத்தில் நடிகர்கள் பிரபு, விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், மற்றும் ராஜ் விஜய் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இந்த கிஸ் படத்தின் கதைக்களமானது ரொமாண்டிக் – நகைச்சுவை படமாக அமைந்துள்ளது என்று கவின் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இப்படம் கல்லூரியில் நடனம் மற்றும் காதல் என மாறுபட்ட கதைக்களம் கொண்டப் படமாக உருவாகியிருக்கிறது . இந்த படமானது வரும் 2025, ஜூலை மாதத்தில் வெளியிடுவதற்குப் படக்குழு திட்டமிட்டுள்ளது . ஆனால் இன்னும் ரிலீஸ் தேதியை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.