இந்திய சினிமாவின் புதிய ப்ளாக்பஸ்டர் திரைப்படமான துரந்தர், சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு திருணத்தில், இந்தப் படத்தின் பாடலுக்கு நடமாடும் வீடியோ, சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. துரந்தர் படத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடலுக்கு, கருப்பு உடையில் ஒருவர் நடனமாட, அவரை பின் தொடர்ந்து அவரது குழுவினர் ஒரே ரிதமில் நடனமாடுகிறார்கள். கல்யாணத்தில் இருந்தவர்கள், அவர்கள் நடனமாடுவதை மிகுந்த உற்சாகத்தோடு ரசிக்கிறார்கள்.